ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 19, 2025

போட்டி போட்டு வசூல் செய்யும் அயலான், கேப்டன் மில்லர்.. 10 நாட்களில் செய்த கலெக்ஷன்

Ayalaan – Captain Miller Collection : கேப்டன் மில்லர் மற்றும் அயலான் படங்கள் இந்த பொங்கல் பண்டிகைக்கு மோதிக்கொண்டது. இந்நிலையில் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர் இல்லை என தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன் இருவரும் வசூலை வாரி குவித்து வருகிறார்கள். அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷின் நடிப்பில் கேப்டன் மில்லர் உருவாகி இருந்தது.

படத்திற்கு ஆரம்பத்தில் நல்ல எதிர்பார்ப்பு இருந்தாலும் ஓரளவு வசூலில் மந்தம் அடைந்தது. ஆனால் இப்போது கேப்டன் மில்லர் படத்தின் வசூல் சூடு பிடிக்க தொடங்கி இருக்கிறது. அதன்படி கிட்டத்தட்ட பத்து நாட்கள் முடிவில் 75 கோடி வசூலை நெருங்கி இருக்கிறது. மேலும் தமிழகத்தில் மட்டும் 35 கோடியை தாண்டி வசூல் செய்துள்ளது.

மேலும் சிவகார்த்திகேயனும் கேப்டன் மில்லருக்கு போட்டியாக அயலான் படத்தை இறக்கி இருந்தார். ஆரம்பத்தில் இருந்தே அயலான் படம் வசூலை வாரி குவித்து வருகிறது. அந்த வகையில் முதல் நாளிலே 3.45 கோடி வசூல் செய்திருந்தது. அடுத்த அடுத்த நாட்களில் பொங்கல் விடுமுறை என்பதால் அதிகம் வசூல் பெற்றது.

Also Read : மீண்டும் கடனாளியான சிவகார்த்திகேயன்.. ஏலியன் கூடவே போயிற வேண்டியதான்

அதன்படி பத்தாவது நாள் முடிவில் கேப்டன் மில்லருக்கு போட்டியாக அயலான் படம் 75 கோடி வசூலை தொட்டுள்ளது. இவ்வாறு இரண்டு படங்களுமே ஒரே மாதிரியான வசூலை பெற்று வருவதால் இன்னும் சில நாட்கள் படம் ஓடினால் தான் யார் பொங்கள் ரேசில் வென்றார்கள் என்று தெரியவரும்.

மேலும் சிவகார்த்திகேயன் தொடர்ந்து சருக்களை சந்தித்து வந்த நிலையில் அயலான் அவரை தூக்கி விட்டுள்ளது. அதோடு தனுஷுக்கும் கேப்டன் மில்லர் படம் கை கொடுத்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். மேலும் இரு படங்களும் விரைவில் 100 கோடி கிளப்பில் இணைகிறதா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Also Read : வாத்தியை ஓரம்கட்டிய சிவகார்த்திகேயன்.. அயலான், கேப்டன் மில்லர் 5வது நாள் வசூல்

Trending News