ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 19, 2025

50 கோடி வசூல் எல்லாம் வதந்தியா.? வெறும் கையில் முழம் போடும் அயலான் படக்குழு

Sivakarthikeyan – Ayalaan : சிவகார்த்திகேயனின் அயலான் படம் பொங்கல் பண்டிகை முன்னிட்டு கடந்த ஜனவரி 12 ஆம் தேதி வெளியானது. மேலும் இந்த படத்திற்கு போடியாக தனுஷின் கேப்டன் மில்லர் படமும் வெளியானது. இந்நிலையில் டாப் நடிகர்களின் படங்கள் இருக்கையில் சைலன்டான அருண் விஜய்யின் மிஷின் படம் வெளியாகி இருந்தது.

இப்போது இந்த படம் தான் ரசிகர்களை பெரிய அளவில் கவர்ந்துள்ளது. ஆனாலும் அயலான் படத்தின் வசூல் அதிகமாக இருப்பதாக ஒவ்வொரு நாளும் வசூல் விவரம் வெளியாகி வருகிறது. அதன்படி ஐந்து நாட்களில் 50 கோடி வசூல் செய்ததாக கூறப்படுகிறது.

மேலும் சிவகார்த்திகேயன் 2019ல் அயலான் படத்தில் நடிக்க தொடங்கிய நிலையில் சில காரணங்களினால் 2024 இல் தான் வெளியானது. இதனால் மிகப்பெரிய வெற்றியை அயலான் படம் கொடுத்திருக்கிறது என பேசப்பட்டு வருகிறது. ஆனால் இந்த வசூல் விபரத்தில் உண்மை இல்லை என்ற ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது.

Also Read : வாத்தியை ஓரம்கட்டிய சிவகார்த்திகேயன்.. அயலான், கேப்டன் மில்லர் 5வது நாள் வசூல்

அதாவது சமீபகாலமாக படத்தை ஓட வைப்பதற்காக வசூலை அதிகமாக சொல்வதாக ஒரு குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. மேலும் தற்போது வரை அயலான் படத்தின் வசூல் 30 கோடி தான் இருக்கும் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே தயாரிப்பில் இறங்கி சிவகார்த்திகேயன் மிகப்பெரிய சருக்கலை சந்தித்தார்.

இதனால் கடனில் அவதிபட்டு இப்போது தான் மீண்டு வந்திருக்கிறார். மேலும் அயலான் படமும் கடனில் சிக்கி விடக்கூடாது என்பதற்காக தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு திரையரங்குகளாக சிவகார்த்திகேயன் செல்ல இருக்கிறாராம். அவரைப் பார்ப்பதற்காகவாவது திரையரங்குகளில் கூட்டம் கூடும் என்று கூறப்படுகிறது.

Also Read : தனுஷ், சிவகார்த்திகேயனுக்கு ஏற்பட்ட சிக்கல்.. செக் வைத்த உதயநிதி

Trending News