வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

செருப்பை கழட்டி அடிக்க போன ஆயிஷா.. கேவலத்தின் உச்சத்திற்கு சென்ற பிக்பாஸ் வீடு

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று காலை முதல் வெளியாகி வந்த ப்ரோமோக்கள் அனைத்தும் பரபரப்பை கிளப்பிய நிலையில் தற்போது பிக் பாஸ் வீடு சந்த கடை ரேஞ்சுக்கு மாறி இருக்கிறது. ஹாட் ஸ்டார் தளத்தில் இந்த நிகழ்ச்சியை 24 மணி நேரமும் ரசிகர்கள் பார்ப்பதற்கு வசதி செய்யப்பட்டுள்ளது.

அதனால் பிக் பாஸ் வீட்டில் நடக்கும் பல சம்பவங்கள் ரசிகர்களுக்கு உடனுக்குடன் தெரிந்து விடுகிறது. அதில் இன்று காலை அசீம் மற்றும் ஆயிஷா இருவருக்கும் நடந்த சண்டை கேவலத்தின் உச்சமாக மாறிய வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் பரவிக் கொண்டிருக்கிறது.

பிக் பாஸ் வீட்டில் ரேங்கிங் அடிப்படையில் போட்டியாளர்கள் நிற்கவைக்கப்படுகின்றனர். அதில் ஒன்பதாவது இடத்தில் நிற்கும் ஆயிஷாவை பார்த்து அசீம் இந்த இடத்திற்கு நீ தகுதி இல்லாதவள். வீட்ல தூங்குறது தவிர நீ என்ன வேலை செய்ற என்று கேட்டார். இதனால் கடுப்பான ஆயிஷா நீங்க தூங்குறது கிடையாதா என்று மல்லுக்கு நின்றார்.

Also read : வன்மத்தால் வீழ்த்திய பிக் பாஸ் போட்டியாளர்கள்.. மக்கள் அவரைக் காப்பாற்றுவார்களா?

மிகவும் சாதாரணமாக முடிந்திருக்க வேண்டிய இந்த பிரச்சனையை அசீம் வாடி போடி என்றெல்லாம் பேசி பெரிது படுத்தினார். என்னதான் ஒரே வீட்டுக்குள் இருந்தாலும் பழக்கம் இல்லாத ஒருவர் வாடி போடி என்று கூப்பிட்டால் அது யாராயிருந்தாலும் கோபம் தான் வரும். அந்த வகையில் அசீமின் பேச்சால் கடுப்பான ஆயிஷா அவரிடம் இப்படி பேசாதீங்க என்று கூறினார்.

ஆனாலும் அடங்காத அசீம் வேண்டுமென்றே அவருடைய கோபத்தை ஏற்றுவது போல் பேசிக்கொண்டே இருந்தார். இப்படி இருவருக்கும் இடையே சண்டை பெரிதாவதை பார்த்த சக போட்டியாளர்கள் சமாதானப்படுத்த முயன்றனர். ஆனாலும் அசீம் பேச்சை நிறுத்துவதாக இல்லை. சமாதானம் செய்ய வந்த விக்ரமனை கூட அவர் வாடா போடா என்றும், நீ என்ன டானா என்றெல்லாம் பேசினார்.

Also read : வாடி, போடி என அசிங்கப்படுத்திய போட்டியாளர்.. கத்தி கலாட்டா செய்த ஆயிஷா, ரேங்கிங் டாஸ்கால் வெடித்த பிரச்னை

அதன் பிறகு ஆயிஷா மீண்டும் மரியாதை இல்லாம பேசாதீங்க என்று கூற அதற்கு அசீம் அப்படித்தான் பேசுவேன் என்னடி பண்ணுவ என்று அநாகரிகமாக பேசினார். இதனால் கடுப்பான ஆயிஷா செருப்பை கழட்டி அவரை அடிக்கச் சென்றார். இதை பார்த்து பதறிப்போன போட்டியாளர்கள் அவரை தனியே அழைத்துக் கொண்டு சென்றனர். ஆனாலும் இருவருக்குமான சண்டை முடியவில்லை. எப்படி என்னை பார்த்து செருப்ப காட்டலாம் சொல்லுடி என்று மீண்டும் சண்டைக்கு பாய்ந்தார் அசீம். இவ்வளவு சண்டையிலும் ராபர்ட் மாஸ்டர் அதை அமைதியாக உட்கார்ந்து பார்த்தது தான் வேடிக்கையாக இருந்தது.

இந்த வீடியோ தற்போது வைரலாகி கொண்டிருக்கிறது. மேலும் இதை பார்த்த ரசிகர்கள் மனநோயாளியான அசீமை அடித்து துரத்துங்கள் என்று கூறி வருகின்றனர். மேலும் கடந்த சீசனில் போட்டியாளராக இருந்த மகத் மும்தாஜை இதுபோன்று மரியாதை இல்லாமல் பேசியதால் ரெட் கார்டு கொடுத்து அனுப்பப்பட்டார். அதே போன்ற நிலைமை தான் அசீமுக்கும் ஏற்படும் என்பது இந்த சண்டையிலிருந்து தெளிவாக தெரிகிறது. அந்த வகையில் இந்தப் பிரச்சினையை ஆண்டவர் எப்படி தீர்த்து வைப்பார் என்பதை காண ரசிகர்கள் இப்போது ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

Also read : விவாகரத்து பின் மகளுக்காக ஏங்கும் ராபர்ட் மாஸ்டர்.. பிக் பாஸ் வீட்டில் கதறி அழுததின் பின்னணி இதுதான்

Trending News