புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

பிக் பாஸில் ஆயிஷா வாங்கிய மொத்த சம்பளம்.. இவ்வளவு லட்சங்களா?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தற்போது விருவிருப்பாக சென்று கொண்டிருக்கிறது. இதில் நேற்றைய எபிசோடில் ஆயிஷா வெளியேறி உள்ளார் சின்னத்திரை நடிகையான ஆயிஷா விஜய் டிவியில் ஏராளமான தொடர்களில் நடித்துள்ளார். ஆனால் இயக்குனர் உடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக தொடரில் இருந்து வெளியேறி விட்டார்.

அதன் பின்பு ஜீ தமிழில் சத்யா என்ற தொடரில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகவும் பரிச்சயமானார். பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்த ஆரம்பத்தில் சுறுசுறுப்பாக விளையாடிய ஆயிஷா சில வாரங்கள் மந்தமாக செயல்பட்டார். அதன் பிறகு இப்போது தான் மீண்டும் தனது விளையாட்டை சுவாரசியமாக விளையாண்டு வருகிறார்.

Also Read : விஜய் டிவி முடிவு செய்த பிக் பாஸ் டைட்டில் வின்னர்.. மக்கள் மனசுல இருக்கிறத உளறி கொட்டிய பிரியங்கா

இந்நிலையில் சனிக்கிழமை எபிசோடில் ராம் வெளியேறிய நிலையில் அடுத்ததாக குறைந்த வாக்குகள் பெற்று ஆயிஷாவும் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறியதால் சக போட்டியாளர்கள் மற்றும் ஆயிஷா ரசிகர்கள் மிகுந்த வருத்தத்தில் உள்ளனர். இப்போது ஆயிஷாவின் சம்பள விபரம் வெளியாகி உள்ளது.

பிக் பாஸ் வீட்டில் ஒரு நாளைக்கு ஆயிஷாவுக்கு 20 ஆயிரம் வரை சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்நிகழ்ச்சியில் பல போட்டிகளில் கலந்துகொண்டு பரிசுகளையும் ஆயிஷா வென்றுள்ளார். இந்நிலையில் மொத்தமாக ஆயிஷா 12 லட்சத்திற்கு அதிகமாக பிக் பாஸ் வீட்டில் இருந்து சம்பளமாக பெற்றுள்ளார்.

Also Read : சூர மொக்கையாக போகும் பிக் பாஸ் சீசன் 6.. சாட்டையுடன் என்ட்ரி கொடுக்க போகும் ஆண்டவர்

ஆயிஷாவுக்கு இவ்வளவு லட்சங்களா என்று அவரது சம்பளத்தை அறிந்தவர்கள் ஆச்சரியப்படுகிறார்கள். மேலும் இந்த வாரம் டபுள் எவிக்சன் என்பதால் அடுத்த கட்டமாக பிக் பாஸ் வீட்டில் பல கடுமையான டாஸ்க்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சாதாரணமாகவே சண்டைக்கு பஞ்சம் இல்லாத இந்த சீசனில் அடுத்தடுத்து கலவரங்கள் வெடிக்க உள்ளது. ஆகையால் வரும் வாரங்களில் ரசிகர்களுக்கு அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் தரும் பல எபிசோடுகள் வர காத்திருக்கிறது. மேலும் இப்போது தான் பிக் பாஸ் நிகழ்ச்சி சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.

Also Read : விவாகரத்து செய்ததை மறைத்த 4 பிக் பாஸ் போட்டியாளர்கள்.. முத்தி போன வயதிலும் பிளே பாயாக இருந்த ராபர்ட் மாஸ்டர்

Trending News