சமீப காலமாக செல்வராகவனின் எந்த படமும் வரவில்லை. மாறாக, அவர் நடித்த படங்கள் தான் பெரும்பாலும் வெளிவந்தது. அதில் அவரது நடிப்பு மிகவும் அபாரமாக இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வந்தனர்.
மேலும் அவ்வப்போது சமூகவலைத்தளங்களில், ஏதேனும் வீடியோ பதிவை போடுவார். அதன்மூலம் கவனம் பெற்று வந்தார்.
இப்படி இருக்க, எப்போ உங்கள் இயக்கத்தில் அடுத்த தரமான படம் வரும் என்று ரசிகர்கள் நச்சரிக்க ஆரம்பித்தனர். குறிப்பாக ஆயிரத்தில் ஒருவன் 2 வருமா வராதா என்ற கேள்வி தான் இவர் எங்கு சென்றாலும் சந்தித்து வந்தார்.
ஆனால் அந்த படத்தை பற்றி பெரிதாக அப்டேட் கொடுக்காத செல்வராகவன், புதுப்பேட்டை 2 நிச்சயம் வரும் என்று சொல்லி ரசிகர்களை உற்சாக படுத்தினார்.
மீண்டும் இணையும் ஆயிரத்தில் ஒருவன் கூட்டணி
இப்படி இருக்க, ஆயிரத்தில் ஒருவன் படம் வெளியான நேரத்தில் கொண்டாடாத ரசிகர்கள் 10 வருடம் கழித்து படத்தை கொண்டாடி ரி-ரிலீஸ் வேண்டும்.. பாகம் 2 வேண்டும் என்றனர்.
ஆனால் அந்த படத்தில் வேலை செய்த அனைவருக்குமே, அந்த படம் ஒரு Bad Experience-ஆக தான் உள்ளது. படத்தை இன்றளவும் கொண்டாட ஒரு முக்கிய காரணம் படத்தின் இசை.
BGM-ல் மிரட்டி இருப்பார் ஜிவி பிரகாஷ் குமார். எத்தனை முறை கேட்டாலும், நாடி நரம்பெல்லாம் தமிழுணர்வை ஏற்படுத்தும் வகையில் அவரது இசை தரமாக இருக்கும்.
இப்படி இருக்க, செல்வராகவன் அடுத்ததாக ஒரு படம் எடுக்கவுள்ளார். அந்த படத்தின் அப்டேட் நாளை வெளியாகும் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில், படம் ஒரு காதல் கதையாக இருக்குமாம். மெண்டல் மனதில் என்று பெயர் வைத்துள்ளார்கள். மேலும் இந்த படத்தில் ஜிவி பிரகாஷ் குமார் தான் இசையமைக்கிறார்.
இவர்கள் காம்போ ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.