புதன்கிழமை, ஜனவரி 8, 2025

ஐயா படத்தில் நயன்தாரா முதல் சாய்ஸ் இல்லையாம்.. 16 வருடங்களுக்கு பின் வெளிவந்த உண்மை

தமிழ் சினிமாவில் ஒரு சில இயக்குனர்கள் மட்டுமே குடும்ப பாங்கான படங்களை இயக்கி வருகின்றனர். அப்படி தனது குடும்ப சென்டிமென்ட் வைத்து அதிகமான படங்களை இயக்கியவர் ஹரி. இவரது இயக்கத்தில் வெளியான படங்கள் அனைத்துமே கிராம கதையை மையமாகக் கொண்டு இருக்கும்.

சரத்குமார் நடிப்பில் ஹரி இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் ஐயா. இப்படம் வெளிவந்த காலத்தில் பட்டி தொட்டி எங்கும் பிரபலமடைந்து நீண்ட நாட்களுக்கு பிறகு சரத்குமாருக்கு ஒரு நல்ல வரவேற்பு பெற்றுக்கொடுத்தது. இப்படத்தில் இரட்டை கதாபாத்திரத்தில் நடித்த சரத்குமார் நடிப்பு படத்தின் வெற்றிக்கு பக்கபலமாக அமைந்தது.

மேலும் நெப்போலியன், வடிவேலு மற்றும் பிரகாஷ்ராஜ் போன்ற பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். இப்படத்தில் நயன்தாரா தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். ஆனால் ஹரி இப்படத்தில் நயன்தாராவிற்கு பதிலாக முன்பே மலையாள நடிகையான நவ்யா நாயர் அணுகியுள்ளார்.

navya nair
navya nair

அப்போது நவ்யா நாயர் மலையாளத்தில் பல படங்களில் நடித்து வந்ததால் இப்படத்தில் நடிக்க முடியாமல் போயுள்ளது. மேலும் இதனை அவர் பிரபல ஊடகம் ஒன்றில் நேர்காணலில் வெளிப்படையாக தெரிவித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் தமிழில் ஏகப்பட்ட படங்கள் நடிக்க வாய்ப்பு கிடைத்தும் அது ஒவ்வொன்றும் ஏதோ ஒரு காரணங்களால் நடிக்க முடியாமல் போய்விட்டது எனவும் கூறியுள்ளார்.

இதுவரைக்கும் இவர் எந்த ஒரு தமிழ் படத்திலும் தற்போது வரை நடிக்கவில்லை. மலையாளத்தில் ஏகப்பட்ட படங்கள் நடித்து அங்கு தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை உருவாக்கி வைத்துள்ளார். தற்போது இவரது நடிப்பில் சில படங்கள் வெளியாக உள்ளன. ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக படம் வெளியாகவில்லை விரைவில் தான் நடித்த படங்கள் திரையரங்கில் வெளியாகும் என கூறியுள்ளார்.

Trending News