அய்யனார் துணை சீரியலில் நிலாவை கூட்டிட்டு ஹாஸ்டலுக்கு போகும் சோழன்.. சேரன் குடும்பத்தில் நடக்கும் கலாட்டா

ayyanar thunai
ayyanar thunai

Ayyanar Thunai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற அய்யனார் துணை சீரியலில், நிலாவுக்கு சோழனுடன் நடந்த கல்யாணத்தில் பெருசாக விருப்பமில்லை. இருந்தாலும் தனக்கு உதவி பண்ணிய சோழன் குடும்பத்திற்காக ஒரு நல்லது செய்ய வேண்டும் என்று வரவேற்புக்கு வந்து நின்று ஊர் மக்கள் முன்னாடி சோழன் குடும்பத்தை கௌரவப்படுத்திவிட்டார்.
இதனால் சோழன், நிலாவை எப்படியும் சமாதானப்படுத்தி இந்த வீட்டிலேயே இருக்க வைத்து விடலாம் என்ற நினைப்பு வந்து விட்டது.

ஆனால் நிலா, எடுத்த முடிவில் தெளிவாக இருக்கிறார். ஹாஸ்டலுக்கு சென்று தனக்கு ஒரு வேலையை தக்க வைத்துக் கொண்டு தனக்கான வாழ்க்கையை பார்த்துக் கொண்டு போக வேண்டும் என்று முடிவு பண்ணி விட்டார். இதனால் காலையிலேயே எழுந்து குளித்து கிளம்பி தயாராகி விட்டார். சேரன், நிலாவுக்கு காப்பி கொடுத்துட்டு வரும் பொழுது நீங்கள் உங்களுக்கு என்ன செய்ய வேண்டுமோ அதை இந்த வீட்டில் இருந்தே செய்யலாமே.

நாங்கள் உங்களுக்கு துணையாக இருக்கும் என்று சொல்லி வீட்டில் தங்க வைப்பதற்கு சேரன், நிலாவிடம் பேசுகிறார். ஆனால் நிலா என்னால் இந்த வீட்டில் இருக்க முடியாது நான் கிளம்பி விடுகிறேன் என்று உறுதியாக சொல்லிவிடுகிறார். பிறகு சோழனை கூட்டிட்டு ஹாஸ்டலுக்கு கிளம்பி விடுகிறார். அப்படி போன இடத்தில் ஹாஸ்டல் எல்லாம் நிலாவுக்கு ஏற்ற மாதிரி அமைந்துவிட்டது.

இதனால் சோழனுக்கு பயம் வந்துவிட்டது, எங்கே நிலா நம்முடன் வராமல் இங்கே இருந்து விடுவாளோ, என்ன பண்ணுவது என்று தெரியாமல் குழப்பத்தில் இருக்கிறார். இதற்கிடையில் சேரனும் முழு மனதுடன் வேலை பார்க்க முடியாமல் நிலா போய்விட்டால் இந்த குடும்பம் என்ன ஆகும். மறுபடியும் ஊர் மக்கள் பேச ஆரம்பித்து விடுவார்களே என்ற கவலையில் டென்ஷனாகவே வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார்.

அடுத்ததாக சோழன் வீட்டிற்கு மாமா வந்து கலாட்டா பண்ணி நிலாவை கேட்டு பிரச்சினை பண்ணுகிறார். இதனால் கோபப்பட்ட சோழன் அப்பா, மாமாவை பிடித்து கீழே தள்ளி விடுகிறார். இப்படி ஒரு கலாட்டா நடக்கும் சமயத்தில் நிலா ஹாஸ்டலை விட்டு சோழனுடன் மறுபடியும் வீட்டுக்கு வர வாய்ப்பு இருக்கிறது.

Advertisement Amazon Prime Banner