Ayyanar Thunai: விஜய் டிவி சமீபத்தில் நிறைய புது சீரியல்களை களமிறக்கி வருகிறார்கள். அதில் பெரிய அளவில் கவனம் பெற்று இருப்பது அய்யனார் துணை சீரியல்தான்.
இதற்கு காரணம் நடிகை மதுமிதா என்று கூட சொல்லலாம். எதிர்நீச்சல் பார்ட் 2 ஆரம்பித்தபோது அதில் மதுமிதா நடிக்காதது எல்லோருக்கும் பெரிய ஏமாற்றம்தான்.
அய்யனார் துணை சீரியலில் கமிட் ஆகி இன்னும் பெரிய அதிர்ச்சி கொடுத்தார்.
இந்த சீரியலின் ப்ரோமோவை பார்க்கும் பொழுது அண்ணன் தம்பி பாசம் மற்றும் கணவன் மனைவிக்கு இடையேயான அன்பை அதிகம் காட்டும் கதைகளம் என்பது தெரிந்து விட்டது.
அய்யனார் துணை சீரியல் ஹீரோ
இந்த சீரியலில் தற்போது பெரிய அளவில் கவனம் வைத்திருப்பவர் சீரியல் ஹீரோ சேரன். மதுமிதாவுக்கு ஜோடியாக நடித்துக் கொண்டிருப்பவர்.
யார் இவர் என்று தெரிந்து கொள்ள பலரும் ஆர்வம் காட்டி வருகிறார்கள். சட்டென பார்ப்பவர்களுக்கு என்னடா மாதம்பட்டி ரங்கராஜ் சீரியல் நடிக்கிறார் என்று தோன்றும் அளவுக்கான முகத்தோற்றம்.
உண்மையிலேயே பலரும் இவர் மாதம்பட்டி ரங்கராஜன் தம்பியாக தான் இருப்பாரோ என்று யோசிக்கும் அளவுக்கு இருவருக்கும் உருவ ஒற்றுமை.
இருந்தாலும் இவர் அவருடைய தம்பி கிடையாது. சேரன் என்ற கேரக்டரில் நடித்துக் கொண்டிருப்பவரின் பெயர் முன்னா.
சன் டிவியில் ஒளிபரப்பான ரோஜா சீரியல் இன் தெலுங்கு வெர்ஷனில் ஹீரோவாக நடித்தார். அதன் பின்னர் சன் டிவியின் சந்திரலேகா சீரியல் எனும் நடித்துக் கொண்டிருந்தார்.
விஜய் டிவியில் சில வருடங்களுக்கு முன் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த ராஜபார்வை சீரியலின் ஹீரோ இவர்தான். கண் தெரியாதவராக இந்த சீரியலில் நடித்திருப்பார். தற்போது அய்யனார் துணை சீரியல் மூலம் மக்களிடையே அதிக பரிட்சயம் ஆகிக்கொண்டிருக்கிறார்.