வெள்ளிக்கிழமை, ஜனவரி 17, 2025

SK23 இல் சிவகார்த்திகேயனுடன் மோத போகும் ஐயப்பனும் கோஷியும் நடிகர்.. முருகதாஸ் போட்ட கணக்கு பலிக்குமா?

Sivarthikeyan : சிவகார்த்திகேயன், ராஜ்குமார் இயக்கத்தில் கமல் தயாரிப்பில் உருவாகி வரும் அமரன் படத்தில் நடித்து வருகிறார். முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டு வருகிறது.

இதற்கு அடுத்தபடியாக ஏஆர் முருகதாஸ் படத்தில் நடிக்கிறார். சிவகார்த்திகேயனின் 23 வது படமான இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ருக்மணி வசந்த் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இந்த படத்தில் இணைந்த பிரபலங்கள் பற்றி தற்போது தகவல் வெளியாகி இருக்கிறது. அதன்படி மலையாள நடிகர் மோகன்லால் இப்படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியான நிலையில் வேறொரு மலையாள நடிகர் தான் நடிக்க இருக்கிறார்.

சிவகார்த்திகேயனுடன் மோத போகும் பிஜு மேனன்

சமீபகாலமாக மலையாள சினிமாவில் வெளியாகும் படங்கள் தமிழில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் ஐயப்பனும் கோஷியும் படத்தில் நடித்த பிஜு மேனன் சிவகார்த்திகேயன் 23 படத்தில் ஒப்பந்தமாகி இருக்கிறார்.

முருகதாஸின் துப்பாக்கி படத்தில் வில்லனாக நடித்த வித்யுத் ஜாமவால் இந்த படத்தில் வில்லனாக நடிக்கிறார். ஆகையால் பக்கா ஆக்சன் கதையில் தான் முருகதாஸின் படம் உருவாக்க இருக்கிறார்.

பாலிவுட்டிலும் பிசியாக இருக்கும் முருகதாஸ் சிவகார்த்திகேயன் படத்தை விரைந்து முடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். மேலும் இந்த படத்தை பற்றிய சுவாரசியமான தகவல்கள் விரைவில் வெளியாக இருக்கிறது.

Trending News