புதன்கிழமை, ஜனவரி 15, 2025

அய்யப்பனும் கோசியும் ரீமேக்கை இயக்கும் தனுஷ் பட தயாரிப்பாளர்.. நல்ல படம், பிறகு ஒய் திஸ் கொலவெறி ப்ரோ?

சமீபகாலமாக மலையாளத்தில் சூப்பர் ஹிட் அடித்த படங்கள் தமிழில் தொடர்ந்து ரீமேக் ஆகி வருகின்றன. அந்த வகையில் ஹெலன், த கிரேட் இந்தியன் கிட்சன், ஆண்ட்ராய்டு குஞ்சப்பன், அய்யப்பனும் கோசியும் போன்ற படங்களை குறிப்பிட்டு சொல்லலாம்.

மேலும் தமிழில் ரீமேக் செய்யப்படும் மலையாள படங்களுக்கு நல்ல எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. அந்த வகையில் அய்யப்பனும் கோசியும் படத்தின் ரீமேக் அறிவித்த போதே படத்தின் மீதான எதிர்பார்ப்பு இரட்டிப்பானது.

மேலும் முதலில் அந்த ரீமேக்கில் கார்த்தி மற்றும் சூர்யா இருவரும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வந்தன. அதனைத் தொடர்ந்து சிம்பு மற்றும் பார்த்திபன் இணைந்து நடிப்பதாக கூறினார்கள்.

தற்போது நடிகர்கள் இன்னும் உறுதி செய்யப்படவில்லையாம். ஆனால் அய்யப்பனும் கோஷியும் படத்தின் ரீமேக்கை யார் இயக்குவது என்பதை மட்டும் தற்போதைக்கு முடிவு செய்து வைத்துள்ளாராம் படத்தின் தயாரிப்பாளர்.

தனுஷ் நடித்த பொல்லாதவன், ஆடுகளம் போன்ற படங்களை தயாரித்த பைவ் ஸ்டார் கதிரேசன் என்பவர் தான் அய்யப்பனும் கோசியும் படத்தை தயாரிக்க உள்ளார். மேலும் அவரே அய்யப்பனும் கோசியும் தமிழ் ரீமேக்கை இயக்கவும் உள்ளார்.

ayyappanum-koshiyum-cinemapettai
ayyappanum-koshiyum-cinemapettai

ஏற்கனவே ராகவா லாரன்ஸ் மற்றும் பிரியா பவானி சங்கர் நடிக்கும் ருத்ரன் படத்தை இயக்கி வரும் கதிரேசன் தற்போது இந்த படத்தையும் இயக்க உள்ளார். சூப்பர் டூப்பர் வெற்றி பெற்ற படத்தின் ரீமேக்கை அனுபவமில்லாத இயக்குனர்கள் இயக்குவது சொந்த காசில் சூனியம் வைக்கும் கதைதான் என்கிறார்கள்.

Trending News