செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

அசீம் வெற்றியை ஏற்றுக் கொள்ள முடியாது.. விஜய் டிவிக்கு எதிராக இணையத்தில் கொந்தளித்த கூட்டம்

விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த 6 வருடங்களாக ஒளிபரப்பாகி வருகிறது. எல்லா சீசங்களிலும் இவர்தான் டைட்டில் வின்னர் பட்டத்தை அடிப்பார் என்பது ரசிகர்களால் ஓரளவு கணிக்க முடிந்தது. ஆனால் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் யார் வெற்றி பெறுவார் என்பது ரசிகர்கள் மத்தியில் குழப்பமாக இருந்தது.

ஏனென்றால் அசீம், விக்ரமன், சிவின் மூவருமே டைட்டில் வின்னர் பெறுவதற்கான வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. இதில் விக்ரமனுக்கு ரசிகர்கள் மத்தியில் பேராதரவு இருந்து வந்தது. ஆரம்பத்தில் இருந்தே சமூகத்தின் மீது அக்கறை உள்ள கருத்துக்களை தொடர்ந்து கூறி வந்தார். தனக்கு ஒரு டாஸ்க் கொடுத்தாலும் அதன் மூலம் மக்களுக்கு நல்ல கருத்தை தான் சொல்லி வந்தார்.

Also Read : விஜய் டிவிக்கு டாட்டா காட்டிவிட்டு ஜீ தமிழுக்கு கிளம்பிய பாக்கியலட்சுமியின் முக்கிய பிரபலம்.. இவங்கதானே சீரியலின் ஆணிவேரே

இவர் தான் பிக் பாஸ் சீசன் 6 டைட்டில் வின்னர் பட்டத்தை பெறவேண்டும் என்று நினைத்த நிலையில் அசீம் வின்னர் என விஜய் டிவி அறிவித்துள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. ஆரம்பத்தில் இருந்தே எல்லா போட்டியாளர்களிடமும் கோபத்தை காட்டிய ஒரே ஆள் அசீம் தான். அவருக்கு தன்னைத்தானே கட்டுப்படுத்திக் கொள்ள முடியாது.

அந்த அளவுக்கு தன்னை மீறி அடுத்தவர்களிடம் கோபம் காட்டக் கூடியவர் தான் அசீம். அதுமட்டுமின்றி கமலே ஒரு முறை மீண்டும் இதே போல் நடந்து கொண்டால் ரெட் கார்ட் கொடுக்கப்படும் என்று எச்சரித்தார். இப்படி இருக்கும் சூழலில் அசீம் டைட்டில் வின்னர் பட்டத்திற்கு எப்படி தகுதியானவர் என பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

Also Read : பொண்டாட்டிங்க தொல்லையால் மார்க்கெட் இழந்த நடிகர்.. பிக் பாஸ் வீட்டுக்குள்ள வந்தும் ப்ரோஜனம் இல்ல

விஜய் டிவி தொடர்களின் கதாநாயகன் என்பதால் மட்டுமே அசீம் வெற்றி பெற்று உள்ளதாக தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். உண்மையான வெற்றி விக்ரமன் அல்லது சிவினுக்கு மட்டுமே கிடைத்திருக்க வேண்டும். கடந்த சீசன்களை போல இந்த சீசனிலும் விஜய் டிவி ஆளுக்கு டிராபி கொடுத்துள்ளது என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

அதுமட்டுமின்றி ட்விட்டரில் விஜய் டிவி பாய்காட் என்ற ஹேஷ்டேக் இணையத்தில் ட்ரெண்டிங்கில் உள்ளது. அசீமின் வெற்றியால் விஜய் டிவி தற்போது மக்களின் எதிர்ப்பை சம்பாதித்துள்ளது. இதன் மூலம் விஜய் டிவி முழுக்க முழுக்க ஒரு சுயநல தொலைக்காட்சி என்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது.

Also Read : மைனா நந்தினி வாங்கிய சம்பளம்.. இரவோடு இரவாக துரத்தினாலும் லட்சங்களை அள்ளிக் கொடுத்த பிக் பாஸ்

Trending News