புது நெல்லு புத நாத்து படத்தில் துவங்கி கடந்த ஆண்டு வெளியான மாஸ்டர் படத்தின் பிரின்சிபல், கர்ணன் படத்தின் பக்கத்து ஊர் பெரிய மனிதர், கேரக்டர் வரை சரியாக கதைக்கு தேவைப்படும் ஒரு ஆர்ட்டிஸ்டாக வலம் வருபவர் நடிகரும் இயக்குனருமான அழகம் பெருமாள். இவர் இயக்கிய படங்களைப் பற்றி பார்ப்போம்
சில தகவல்களை சேகரிக்க தொடங்கிய நமது கைகளில் சிக்கிய சில தகவல்களை செய்தியாக தொகுத்துள்ளோம். அழகம்பெருமாள் கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரத்தை சேர்ந்தவர் இவரின் குடும்பத்தினர் பலரும் இவர் படிக்கும் போதே அரசு பணியாளர்கள்.
ஆனால் அழகம் பெருமாளின் கனவு கொஞ்சம் பெரியது தான். இயக்குனராகும் கனாவோடு சென்னைக்கு வந்தவருக்கு சென்னை அடையார் பிலிம் இன்ஸ்டியூட் ஒரு கோர்ஸ் முடிக்க வைத்து கோல்டு மெடலையும் கையில் தந்துவிட்டது.
கனவில் பாதி நனவான சந்தோஷம் மனதில் இருக்க இயக்குனர் மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக பணியாற்றினார் அழகம் பெருமாள். தளபதி படம் முதல் இருவர் படம் வரை அவரோடு உதவி இயக்குனராக இருந்தவருக்கு தனியாக படம் பன்ன ஒரு ஆசையும் வந்துள்ளது அந்த ஆசையின் அச்சாரமாகத்தான் அரவிந்த் சாமி கரீஷ்மா கபூர் லீட் ரோலாக வைத்து முதல் முதலாக என்ற படத்தை இயக்கவிருப்பதாக 1998ல் கூறுகிறார். அவர் பேசி வைத்திருந்த தயாரிப்பு நிறுவனம் சரிவை சந்திக்கவே இப்படம் டைட்டிலோடு கைவிடப்பட்டது.
அடுத்த கட்டத்தை நோக்கி வாழ்க்கை நகர்த்தவே விஜய் சிம்ரனை வைத்து உதயா படத்தை எடுக்க திட்டமிட்டார் அழகம் பெருமாள் பல்வேறு தயாரிப்பு நிலுவைத்தொகை என பல பிரச்சினைகளை கடந்து 2004ல் வெளியானது இந்த படம் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் உதயா வந்து சேர்வதற்குள்ளாகவே மாதவன் ஜோதிகா நடிப்பில் டும்டும்டும் படத்தையும் ஸ்ரீகாந்த் மீராஜாஸ்மின் நடிப்பில் ஜூட் ஆர் யூ ரெடி என்கிற படங்களையும் எடுத்து வெளியிட்டும் விட்டார் இயக்குனர் அழகம் பெருமாள்.
அத்தோடு இயக்கத்தை கைவிட்டவருக்கு கடைசியாக ஐஸ்வர்யா ராய் அபிசேக் பச்சன் நடிப்பில் வெளிவந்த குரு படத்தின் தமிழ் டயலாக்குகளை எழுதும் பணி கிடைத்தது அதிலும் தன் குருவின் படைப்பான குருவுக்கு எழுதிக்கொடுத்திருந்தார் இயக்குனரும் நடிகருமான அழகம் பெருமாள்.
இப்போது வரை அவ்வப்போது படங்களில் வந்து செல்கிறார் சில நிமிடங்கள் நடித்தாலும் பல படங்களில் குறிப்பிடப்பட்ட கேரக்டர்களைே தேர்விடுகிறார் நடிகர் அழகம் பெருமாள்