மேட்ச் பிக்ஸிங் செய்து என் கிரிக்கெட் வாழ்க்கையை முடித்தார்.. முகமது அசாருதீன் மீது குற்றம் சாட்டிய நட்சத்திர வீரர்!

இந்திய அணியில் சச்சின் டெண்டுல்கர் உடன் தனது கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்கியவர். இவர் சச்சினுக்கு நெருங்கிய நண்பர், இருவரும் பள்ளி தோழர்கள், அணியில் ஒரே நேரத்தில் தான் வாய்ப்பைப் பெற்றனர்.

வினோத் காம்ப்ளி 1990களில் இந்திய அணிக்காக விளையாடியவர். டெண்டுல்கர் மற்றும் காம்ப்ளி இருவரும் பள்ளிகளுக்கு இடையிலான ஒரு போட்டியில் 626 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து சாதனை படைத்துள்ளனர். இந்த சாதனையை இன்றுவரை யாரும் முறியடிக்கவில்லை. இதில் சச்சின் டெண்டுல்கர் 326 ரன்களும் வினோத் காம்ப்ளி 349 ரன்களும் அடித்துள்ளனர்.

Vinoth-kambli-Cinemapettai.jpg
Vinoth-kambli-Cinemapettai.jpg

பின் இருவரும் இந்திய அணியில் விளையாடிக் கொண்டிருக்கும் சமயத்தில் 1996ஆம் ஆண்டு உலகக்கோப்பை போட்டி நடைபெற்றது. அந்த தொடரில் அரையிறுதிப் போட்டியில் இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணியின் விக்கெட்டுகள்(120/8) அடுத்தடுத்து சரியவே, மைதானத்தில் இருந்த ரசிகர்கள் கலவரத்தில் ஈடுபட்டனர். அதனால் நடுவர்கள்  இலங்கை அணி வெற்றி பெற்றது என அறிவித்து விட்டனர்.

Vinoth-Cinemapettai.jpg
Vinoth-Cinemapettai.jpg

அந்தப் போட்டியில் களத்தில் நின்ற வினோத் காம்ப்ளி கண்ணீருடன் வெளியேறினார். அதன் பின் அணியில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக வாய்ப்புகள் குறைவே, இந்திய அணியில் இருந்து முழுவதுமாக நீக்கப்பட்டார். அதுமட்டுமின்றி இந்திய அணியின் அப்போதைய கேப்டன் முகமது அசாருதீன் இலங்கைக்கு எதிரான 1996ஆம் ஆண்டு உலக கோப்பை அரையிறுதிப் போட்டிய மேட்ச் பிக்சிங் செய்துவிட்டார் என்று குற்றம் சாட்டினார்.

Azhar-fixing-Cinemapettai.jpg
Azhar-fixing-Cinemapettai.jpg

இது இந்திய அணியில் உள்ள அனைவருக்கும் தெரியும் ஆனால் யாரும் உண்மையைப் பேச தயாராகவில்லை என பகிரங்கமாக தெரிவித்தார். மேலும் தனது நெருங்கிய நண்பரான சச்சின் டெண்டுல்கர் கூட தனக்கு உதவவில்லை என வருத்தம் தெரிவித்தார்.