ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

பாகுபலியை அட்டை காப்பி அடித்த கங்குவா டீம்.. கேலி, கிண்டலுக்கு உள்ளான ட்ரெய்லர்

Kanguva: சூர்யா ரசிகர்கள் இந்த ஆண்டு பெரிதும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் படம் தான் கங்குவா. சிறுத்தை சிவா, சூர்யா கூட்டணியில் உருவாகி இருக்கும் இந்த படத்தின் போஸ்டர், வீடியோ முன்பு வெளியாகி பலரையும் வியப்பில் ஆழ்த்தி இருந்தது.

அதிலும் சூர்யா இந்த படத்தில் இரட்டை வேடத்தில் நடித்திருக்கிறார். இந்த படம் அக்டோபர் பத்தாம் தேதி ரிலீஸாக உள்ள நிலையில் இன்றைய தினம் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி இருந்தது. சூர்யா ரசிகர்களால் கங்குவார் ட்ரெய்லர் கொண்டாடப்பட்டு வருகிறது.

ஆனாலும் பல படத்திலிருந்து காட்சிகள் கங்குவா படத்தில் காப்பி அடிக்கப்பட்டுள்ளதாக இணையவாசிகள் கேலி, கிண்டல் செய்து வருகிறார்கள். குறிப்பாக பாகுபலி படத்தில் இடம் பெற்ற காட்சியை அப்படியே கங்குவா படத்தில் சிறுத்தை சிவா வைத்துள்ளதாக புகைப்படத்துடன் ஒப்பிட்டுள்ளனர்.

பாகுபலி பட சாயலில் வெளியாகி இருக்கும் கங்குவா ட்ரெய்லர்

bahubali-copy-kanguva
bahubali-copy-kanguva

இது கங்குவாவா அல்லது பாகுபலி படத்தின் ரீமேக்கா என கிண்டலாக கமெண்ட் செய்து வருகிறார்கள். சூர்யாவுக்கு கடந்த சில வருடங்களாக படங்கள் எதுவும் பெரிய வெற்றி கொடுக்கவில்லை. ‌ கங்குவா படத்தை தான் பெரிதும் நம்பி இருக்கிறார்.

இந்த சூழலில் ட்ரெய்லர் வெளியான நிலையிலே இவ்வாறு எதிர்மறையான விமர்சனங்களை பெற்று வருவது படத்திற்கு பாதிப்பை ஏற்படுத்த கூடும். அதுவும் கங்குவா படம் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகி இருக்கிறது.

அந்த அளவுக்கு வசூலை பெற வேண்டும் என்றால் ரசிகர்களின் எதிர்பார்ப்பை மீறி சிறுத்தை சிவா கங்குவா படத்தில் பல விஷயங்களை செய்திருக்க வேண்டும். ஆகையால் படம் வெளியானால் தான் உண்மையான விமர்சனம் தெரியவரும்.

சூர்யாவுக்கு கைகொடுக்கும் கங்குவா

Trending News