வெள்ளிக்கிழமை, ஜனவரி 3, 2025

போலீஸில் சிக்கிய பாக்கியலட்சுமி.. மனைவியை உதவிடும் கோபி!

விஜய் டிவியில் விறுவிறுப்புடன் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி சீரியலில் தொடர்ந்து பல திருப்பங்கள் தற்போது அரங்கேறிக் கொண்டிருக்கிறது. இதில் சனிக்கிழமை அன்று 3 மணி நேரம் ஒளிபரப்பான சிறப்பு தொகுப்பில் பாக்யா புதிதாக கேட்டரிங் நடத்துவதற்காக வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து அதனை சினிமா பிரபலங்களான ரஞ்சித் மற்றும் பிரியா ராமன் கொண்டு திறந்துள்ளார்.

இதைத்தொடர்ந்து புதிதாக கேட்டரிங் நடத்த ஆயத்தமான பாக்கியலட்சுமிக்கு அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஏற்பட்டுள்ளது. ஏனென்றால் பாக்கியலட்சுமி வாடகைக்கு எடுத்திருக்கும் வீட்டின் பக்கத்து வீட்டுக்காரர், மக்கள் குடியிருக்கும் இடத்தில் அதிக சப்தம் கேட்கும் மெஷின்களை வைத்து மசாலா கம்பெனி நடத்துவதாக போலீசாரிடம் புகார் அளித்து விட்டனர்.

இதனால் போலீசாரும் பாக்கியலட்சுமி கேட்டரிங் தொழிலை நடத்தக் கூடாது என்ற அதிரடி முடிவை தெரிவித்தனர். ஆனால் குடிகார புருஷனை வைத்திருக்கும் செல்விக்கும், கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கும் இந்த மசாலா கேட்டரிங் கம்பெனி மூலம் வேலை கொடுக்கப்பட்டு அவர்களுடைய வாழ்க்கைக்கு உதவியாக இருக்கிறது என பாக்கியலட்சுமி போலீசாரிடம் தைரியமாக வாதிட்டு போலீசாரை சமாதானப்படுத்தினார்.

எனவே பாக்கியலட்சுமியிடம் விளக்கத்தை பெற்ற போலீசார், இந்த இடத்தில் கேட்டரிங் கம்பெனி இருந்தால் யாருக்கும் எந்த பிரச்சினை ஏற்படாது என்பதை உணர்ந்து, புகார் அளித்து அவர்களை சமாதனப்படுத்தி பிரச்சனையை சுமூகமாக தீர்த்து வைத்தனர்.

இந்த சம்பவம் நடைபெறும் பொழுது கோபி அவருடைய மனைவி பாக்யாவிற்கு உறுதுணையாக இல்லாமல், ‘உன்னுடைய கேட்டரிங் தொழிலில் ஏதாவது பிரச்சினை வந்தால், அதை நீ தான் சமாளிக்க வேண்டும்.

இல்லையெனில் அந்த தொழிலை விட்டு விடு’ என்று தூக்கி எறிந்து பேசினார். இவ்வாறு நடப்பது புதிதல்ல, கோபி தொடக்கத்திலிருந்தே பாக்யாவை உதாசிங்கப்படுத்தி பேசி  பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்களிடையே வெறுப்பை சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்.

Trending News