இல்லத்தரசிகளுக்கு இஷ்டமான சீரியல் ஆக மாறிய பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது விறுவிறுப்பான கதைக்களத்துடன் ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. இன்னிலையில் பாக்யாவின் குடும்பத்தினர் கடந்த வாரம் முழுவதும் பொங்கல் பண்டிகையை கிராமத்தில் சிறப்பாக கொண்டாடிய பின் தற்போது வீடு திரும்பியுள்ளனர்.
எனவே நான்கு நாட்களாக தன்னுடைய கல்லூரி காதலியான ராதிகாவை பார்க்க முடியாமல் மனைவியிடம் மாட்டித் தவித்துக் கொண்டு கோபி, ஊருக்கு வந்த உடனேயே ராதிகாவிடம் போன் போட்டு வீட்டிற்கு வருவதாக கூறிக் கொண்டிருக்கிறார். அத்துடன் ராதிகாவை பார்க்கமுடியாமல் ஏங்கித் தவித்ததாகவும் கோபி, ராதிகாவிடம் பெட்ரூமில் கடலை போட்டதை, பெட்ரூமுக்கு எதார்த்தமாக வந்த பாக்யா கேட்டு விடுகிறார்.
கோபி யாரிடமும் இவ்வளவு கொஞ்சி பேசுவதை பார்க்காத பாக்யாவிற்கு, தற்போது கோபி வினோதமாக நடந்து கொள்வது அவர் மீது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் அவர் பேசியதைக் கேட்டு ஷாக் ஆகி கையில் இருந்த பேகை கீழே போட்டு விடுகிறார். அந்த சத்தத்தில் திரும்பி பார்த்த கோபி, ‘என்ன பண்ற பாக்யா, என்ன வேணும் உனக்கு’ என்று அதட்டலுடன் பாக்யாவை பார்த்து கேள்வி கேட்கிறார்.
பின்பு போனை கட் செய்து விடுகிறார். மேலும் தன்னுடைய ஆண் நண்பருடன் பேசியதாக கோபி சமாளித்து விட்டார். இருப்பினும் பாக்யா தன்னுடைய சந்தேகப் பார்வையால் கோபியை முறைத்து பார்க்கிறார். இதன்பின்பு கோபியின் கள்ளக்காதல் பாக்யாவிற்கு தெரியவந்து, பாக்யா எப்படி அதனை சமாளிக்க போகின்றார் என்பதைப் பார்ப்பதற்காக சீரியல் ரசிகர்களிடம் ஆர்வத்துடன் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.
அத்துடன் கோபியின் இந்த தகாத உறவு கோபியின் அப்பா மற்றும் கோபியின் இளையமகன் எழிலுக்கு ஏற்கனவே தெரியும் என்பதால் இனி பாக்யாவிற்கும் அந்த விஷயம் தெரிந்தால் பாக்கியலட்சுமி சீரியலுக்கு கூடுதல் சுவாரசியத்துடன் பாக்யாவை புரட்சிகர பெண்மணியாக காட்ட வாய்ப்பிருக்கிறது. அத்துடன் பாக்கியா விற்கு வில்லியாக ராதிகா மாறிவிடுவார்.
ஏனென்றால் கோபி தன்னுடைய மனைவி பாக்யாவை விட்டு பிரிந்து ராதிகாவுடன் வாழ முடிவெடுத்துள்ளார். ஆகையால் முதல் வாழ்க்கையில் ஏமாற்றத்தை சந்தித்த ராதிகா மீண்டும் கோபியுடன் இணைந்து புது வாழ்க்கையை துவங்க முடிவெடுத்து பாக்யாவை எதிரியாக பார்க்க போகிறார். ஆகையால் இனி வரும் நாட்களில் ராதிகா மற்றும் பாக்கிய இருவருக்கும் இடையே மோதல் வெடிக்க போகிறார்.