Serial: பாக்யலட்சுமியின் கணவர் கோபி தோளுக்கு மேல வளர்ந்த பிள்ளைகளை வச்சுட்டு ராதிகா பின்னாடி சுத்துனது தானே நமக்கு எல்லாம் தெரியும்.
ஆனால் மனுஷன் சிறுசுல இருந்தே இதே வேலையா தான் சுத்திகிட்டு இருந்துருக்காரு. விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் கோபி கேரக்டரில் நடித்து கொண்டிருப்பவர் தான் சின்னத்திரை நடிகர் சதிஷ்.
90களின் காலகட்டத்தில் இருந்தே சின்னத்திரை சீரியல் மற்றும் படங்களில் நடித்து கொண்டிருக்கிறார். ஆனால் பாக்கியலட்சுமி சீரியல் தான் மக்களிடையே பிரபலப்படுத்தியது.
ஆனந்தம் சீரியல் தினேஷ் கேரக்டர்
பாக்கியாவிடம் ஒரு காலத்தில் சிங்கமாக கர்ஜித்து கொண்டிருந்த கோபி, ராதிகாவிடம் பம்மியது எல்லாம் சுவாரஸ்யத்தின் உச்சக்கட்டம்.
இந்த சீரியல் என்றில்லை, சதிஷ் 2000 ஆம் ஆண்டு ஒளிபரப்பான ஆனந்தம் சீரியலில் கூட இதே கேரக்டர் தான். 90ஸ் கிட்ஸுகளுக்கு ஆனந்தம் சீரியல் பேவரைட் ஆன ஒன்று.
RK என்னும் கேரக்டரில் டெல்லி குமார் நடித்திருப்பார். இப்போது எதிர்நீச்சல் சீரியல் ஞானம் அந்த சீரியலின் ஹீரோ. அவருக்கு ஜோடி தான் நடிகை சுகன்யா.
RKவின் இரண்டு மகள்களில் ஒருவரான சுவாதியை தான் தினேஷ் கேரக்டரில் நடித்த சதிஷ் திருமணம் செய்து கொள்வார்.
அவருக்கு மாடர்ன் ஆக இருக்கும் சுவாதியின் அக்கா அனிதாவை திருமணம் செய்து கொள்ள தான் ஆசை. அது மட்டும் இல்லாமல் பயங்கரமான பிளேபாய்.
சுவாதியை திருமணம் ஆன பிறகு படாதபாடு படுத்துவார். இவரை அப்போது வசை பாடாத ஆட்களே இல்லை என்று கூட சொல்லலாம்.