வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

விரைவில் உருவாக இருக்கும் பாட்ஷா 2 .. ரஜினியின் அனுமதிக்காக காத்திருக்கும் அல்டிமேட் ஹீரோ

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் 1995 ஆம் ஆண்டு பொங்கல் ரிலீஸ் ஆக வெளியான திரைப்படம் தான் பாட்ஷா. இந்த படத்தை இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கியிருந்தார். ரகுவரன், நக்மா, சரண்ராஜ் ஆகியோர் நடித்த இந்த படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் திரை வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

இந்தப் படத்திற்குப் பிறகு வெளியான அத்தனை மும்பை தாதாக்கள் கதையிலுமே பாட்ஷாவின் சாயல்தான் இருக்கும். அந்த அளவுக்கு பாட்ஷா ஒரு சிறந்த படமாக அமைந்துவிட்டது. பாட்ஷா திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதோடு அந்தக் காலத்திலேயே சுமார் 27 கோடி வரை வசூல் செய்தது.

Also Read: சூப்பர் ஸ்டாருக்கு மட்டும் ஓகே.. விஜயகாந்தை அசிங்கப்படுத்திய ஹீரோயின்

பாட்ஷா படத்தின் இரண்டாம் பாகம் ரஜினிகாந்த் எடுக்க வேண்டும் என்பது ஒட்டுமொத்த கோலிவுட் ரசிகர்களுக்குமே மிகப்பெரிய எதிர்பார்ப்பாக இருந்தது. ஆனால் சூப்பர் ஸ்டாரோ எந்த பிடியும் கொடுக்காமல் இருந்து வருகிறார். இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணாவும் இதுபற்றி எதுவும் சொல்லியதில்லை. இந்நிலையில் பாட்ஷா 2 படத்தில் அப்டேட் வெளியாகியிருக்கிறது.

பாட்ஷா படத்தின் இரண்டாம் பாகத்தை தற்போது இயக்குனர் விஷ்ணுவர்தன் கையில் எடுத்திருக்கிறார். விஷ்ணுவர்தன் ஏற்கனவே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பில்லா படத்தின் இரண்டாம் பாகத்தை நடிகர் அஜித்தை வைத்து இயக்கி இருந்தார். இந்தப் படத்தில் அஜித் தான் நடிக்க வேண்டும் என்பது ரஜினியின் விருப்பமாகவே இருந்தது.

Also Read: 1987-ல் வரிசையாக தோல்வியை சந்தித்த கேப்டன்.. தோள் கொடுத்த தூக்கி விட்ட சூப்பர் ஸ்டார்

பில்லா 2 படமும் மிகப்பெரிய ஹிட் அடித்தது. அதன் பின்னர் விஷ்ணுவர்தன் நடிகர் அஜித்தை வைத்து ஆரம்பம் படத்தை இயக்கினார். பாட்ஷா 2 படத்திற்கும் அஜித்தை தான் தேர்ந்தெடுத்து இருக்கிறார். தற்போது பாட்ஷா 2 படத்திற்காக தினந்தோறும் சத்யஜோதி ப்ரொடெக்சன் ஆபீஸில் விவாதம் நடைபெற்று வருகிறது.

இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க இருப்பதாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்திடமும் பேசி விட்டார்கள். அவரும் கூடிய விரைவில் அனுமதி வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும். அஜித் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் விக்னேஷ் சிவன் படத்தை முடித்த பின்பு பாட்ஷா 2 வின் அடுத்தடுத்த அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பிருக்கிறது.

Also Read: 850 தியேட்டரில் ஹவுஸ்புல்லான சூப்பர் ஸ்டாரின் படம்.. பாட்ஷா படம் போல் ரஜினிக்கு அமைந்த ஹிட் படம்

Trending News