பாட்ஷா படத்தை குறை சொன்ன KS ரவிக்குமார்.. ரஜினி கொடுத்த மாஸ் பதில்

rajini-ks-ravikumar
rajini-ks-ravikumar

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் 1995ஆம் ஆண்டு வெளியாகி பட்டிதொட்டியெங்கும் பட்டையை கிளப்பிய திரைப்படம் பாட்ஷா. ரஜினியின் சினிமா கேரியரை வசூல் ரீதியாக அடுத்த தளத்திற்கு எடுத்துச்சென்ற படங்களில் முக்கியமான ஒன்று.

பாட்ஷா படத்தில் இடம்பெற்ற ‘ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்ன மாதிரி’ போன்ற பல பஞ்ச் டயலாக்குகள் ரசிகர்கள் மத்தியில் இன்றும் ஃபேவரிட் ஆக இருந்து வருகிறது. அதேபோல் பாட்ஷா படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்துமே பட்டிதொட்டியெங்கும் குத்தாட்டம் போட வைத்தது.

பாட்ஷா படத்திற்கு தேனிசைத் தென்றல் தேவா இசையமைத்திருந்தார். அதைவிட முக்கியமாக ரஜினிக்கு இணையான வில்லன் வேடத்தில் ரகுவரன் கலக்கி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. பாட்ஷா படம் முழுக்கவே ரஜினிக்கு மாஸ் முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்ட படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ரஜினிக்கு எப்போதுமே தான் நடித்த படங்களை ரிலீஸ் செய்வதற்கு முன்பு பார்த்து விடும் பழக்கம் உள்ளது. அப்படி பாட்ஷா படத்தை பார்க்கும் போது இயக்குநர் கேஎஸ் ரவிக்குமாரையும் அழைத்து உடன் சென்று இருவரும் படம் பார்த்துள்ளனர். படம் முடிந்து வெளியே வந்த பின்னர் கேஎஸ் ரவிக்குமார் பாட்ஷா படத்தில் உள்ள குறைகளை சுட்டிக் காட்டினார்.

அதிலும் முக்கியமாக ரகுவரன் வில்லனுக்கு கிளைமேக்ஸில் வயதாவது போலவும் ரஜினி கடைசி வரை எளிமையாகவே இருப்பது போலவும் காட்டப்பட்டுள்ளது. இது கண்டிப்பாக படம் வெளியான பிறகு ஒரு விதமான நிகழ்வு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது என எச்சரித்தார். இவை அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படம் முழுக்க தனக்கு மாஸ் காட்சிகள் அதிகமாக இருப்பதால் இந்த லாஜிக் பெரிய அளவு பாதிக்க வாய்ப்பில்லை என்று கூறினாராம்.

ரஜினி சொன்னது போலவே படம் வெளியான பிறகு பட்டி தொட்டி எங்கும் வசூலை வாரி குவித்தது. அதுமட்டுமில்லாமல் கேஎஸ் ரவிக்குமார் சொன்ன குறையை ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை அவரே ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார்.

Advertisement Amazon Prime Banner