செவ்வாய்க்கிழமை, பிப்ரவரி 4, 2025

தோல்வியடைந்த பாபா படம்.. பார்ட்டி வைத்து கொண்டாடிய சில நடிகர்கள்

ரஜினிகாந்த் சினிமா கேரியரில் மிகப் பெரிய எதிர்பார்ப்பில் வெளியாகி தோல்வியை சந்தித்த திரைப்படம் என்றால் அது பாபா தான். சொந்த தயாரிப்பு சொந்தக்கதை என தன்னைத்தானே சூடு போட்டுக் கொண்டார்.

ஆனால் டிவியில் பார்க்கும்போது இந்த படம் ஏன் தோல்வியடைந்தது என்ற சந்தேகம் அனைவர் மனதிலும் இருக்கும். காமெடி, ஆக்ஷன், என்டர்டைமென்ட் என மாஸ் படங்களுக்கு உண்டான அனைத்து அம்சங்களும் இந்த படத்தில் இருக்கும்.

சுரேஷ் கிருஷ்ணா இயக்கியிருந்த இந்தப் படம் படுதோல்வியை சந்தித்ததோடு மட்டுமல்லாமல் இந்த படத்தால் ஏற்பட்ட நஷ்டத்தை சரிகட்ட ரஜினிகாந்த் தன்னுடைய சொந்தப் பணத்திலிருந்து எடுத்துக் கொடுத்தார் என்பதும் தமிழ் சினிமாவின் மறக்க முடியாத நினைவுகளாக உள்ளன.

இன்றைய தேதியில் ஒரு நடிகரின் படம் தோல்வியடைந்து விட்டால் அதை தானே பொறுப்பேற்றுக் கொள்ளும் அளவுக்கு பெரிய மனசு யாருக்கும் இல்லை.

இப்படி ஒருபுறம் இருக்க ரஜினிகாந்தின் பாபா படம் தோல்வி அடைந்ததை தமிழ் சினிமாவில் உள்ள சில நடிகர்கள் பார்ட்டி வைத்து கொண்டாடியதாகவும் ஒரு செய்தி உள்ளது.

இதோடு ரஜினியின் கேரியர் அவ்வளவுதான் என முடிவுசெய்து அதற்கப்புறம் நீதான், நான்தான் என பார்ட்டியில் போதையில் சிலர் பேசிக் கொண்டதாகவும் செய்திகள் வந்தன. அது யாராக இருக்கும் என அறிய இப்போதைய ரசிகர்கள் சமூக வலைதளங்களை நோண்டத் தொடங்கியிருக்கின்றனர்.

baba-rajinikanth
baba-rajinikanth

Trending News