சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 72-வது பிறந்த நாளையொட்டி 20 வருடங்களுக்கு முன்பு பிளாப் ஆன பாபா படத்தை ரீ ரிலீஸ் செய்தனர். ஆனால் பெரும் நம்பிக்கையுடன் ரஜினி ரிலீஸ் செய்த இந்த படம், இப்போது மூன்று நாட்களில் படத்தின் வசூல் ஒரு கோடியை தொடுவதற்கும் தட்டு தடுமாறுகிறது.
புதுப்பொலிவுடன் திரையிடப்பட்ட பாபா படம் புயல், மழையில் சிக்கி சின்ன பின்னமானது. இதனால் பலரும் வீட்டை விட்டு வெளி வராத நிலை ஏற்பட்டதுடன், திரையரங்குகளில் ரஜினி ரசிகர்களை வரவிடாமல் செய்தது. இதனால் பாபா படம் வசூலில் மீண்டும் பயங்கர அடி வாங்கி விட்டது.
பாபா படம் மூன்று நாட்களில் ஒட்டுமொத்தமாக 80 லட்சத்தை மட்டுமே தமிழகத்தில் வசூலித்திருக்கிறது. அத்துடன் சென்னையில் மட்டும் 3 நாட்களில் 75 லட்சத்தை தட்டு தடுமாறி படாத பாடுபட்டு வசூல் செய்திருக்கிறது. மேலும் ரீ-ரிலீஸ் செய்யப்பட்ட பாபா திரைப்படம் புதிதாக எடிட்டிங் செய்ததுடன், கலர் கிராபிக் செய்யப்பட்டு ரஜினியும் மீண்டும் டப்பிங் பேசி பல முயற்சிகளை மேற்கொண்டார் .
அதுமட்டுமில்லாமல் பழைய பாபா படத்தில் ஏழு மந்திரங்களுக்கு பதிலாக ஐந்து மந்திரங்கள் மட்டுமே இடம்பெற்று இருக்கிறது. அதுமட்டுமின்றி பழைய பாபா படத்தின் கிளைமாக்ஸில் பாபாவா? மக்களா? என்ற கேள்வி ரஜினியிடம் கேட்கப்படும், அதற்கு மக்கள் தான் என்று ரஜினி பதிலளித்து அவர் அரசியலில் வருவார் என்பதை உறுதிப்படுத்தினார்.
Also Read: 2ம் பாகம் வரப்போகுதா.? பாபா ரீ ரிலீஸ் ஒரு விமர்சனம்
அதன் பிறகு இப்போது ரஜினி அரசியலுக்கு குட் பாய் சொன்னதால் புதுப்பொலிவுடன் திரையிடப்பட்டிருக்கும் பாபா படத்தின் கிளைமாக்ஸ் முற்றிலுமாக மாற்றி உள்ளனர். இப்படி வெற்றிக்காக பல வேலைகளைப் பார்த்த ரஜினி நிச்சயம் இந்த படத்திற்கு ரசிகர்கள் ஆதரவு கொடுப்பார்கள் என நம்பினார்.
இருப்பினும் 2002-ல் வெளியான பாபா படத்தைப் போலவே 2022-ல் வெளியான பாபா படத்தின் ரீ-ரிலிசும் பிளாப் ஆனது. ஏற்கனவே அண்ணாத்த படத்தின் மூலம் படுதோல்வியை சந்தித்த ரஜினி, இப்போது பாபா படத்திற்கும் அதே நிலைமை வந்திருப்பதால் பெரும் துக்கத்தில் இருக்கிறார். இதற்குப் பிறகு இவர் நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் நடித்துக் கொண்டிருக்கும் ஜெயிலர் படத்தை தான் மலை போல் நம்பியாக வேண்டும்.
Also Read: பாபா ரீ ரிலீஸில் இப்படி ஒரு அரசியல் சூழ்ச்சியா? பரபரப்பைக் கிளப்பி, உண்மை காரணத்தை உடைக்கும் பிரபலம்