வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

எதிர்பார்ப்பை எகிற வைத்த பாபா ரீ ரிலீஸ்.. நக்கல் செய்து ரஜினியை வம்புக்கு இழுத்த ப்ளூ சட்டை மாறன்

கடந்த 2002 ஆம் ஆண்டு சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் பாபா. ரஜினியின் திரை வாழ்க்கையில் முக்கிய திரைப்படமாக இருக்கும் இந்த திரைப்படம் மீண்டும் புதுப்பொலிவுடன் ரசிகர்களின் பார்வைக்கு வர இருக்கிறது. அந்த வகையில் இந்த திரைப்படம் வரும் டிசம்பர் 10ஆம் தேதி திரையரங்குகளை அலங்கரிக்க இருக்கிறது.

வரும் டிசம்பர் 12ஆம் தேதி சூப்பர் ஸ்டார் தன்னுடைய 72 ஆவது பிறந்த நாளை கொண்டாட இருக்கிறார். அதை முன்னிட்டு அவருடைய பாபா திரைப்படம் ரீ ரிலீஸ் ஆக இருக்கிறது. கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு முன் இந்த படத்திற்கு எந்த அளவுக்கு எதிர்பார்ப்பும், ஆர்வமும் இருந்ததோ அதில் கொஞ்சம் கூட குறையாமல் இப்போதும் இருக்கிறது.

Also read: 20 வருடங்களுக்குப் பிறகும் கெத்து காட்டும் சூப்பர் ஸ்டார்.. ரீ-ரிலீஸில் கல்லா கட்டாமல் விடமாட்டேன்

இதுதான் சூப்பர் ஸ்டாருக்கு இருக்கும் பவர். தற்போது இந்த படத்தின் ஆன்லைன் டிக்கெட் புக்கிங் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் பல தியேட்டர்களில் காலை நான்கு மணி காட்சிக்கான டிக்கெட்டுகள் அனைத்தும் ஹவுஸ்புல் ஆகி இருக்கிறது. இதுதான் திரை உலகில் பலருக்கும் ஆச்சரியமாக இருக்கிறது. ஆனால் இப்படி ஒரு அதிசயத்தை சூப்பர் ஸ்டாரால் மட்டும்தான் செய்ய முடியும் என்று அவருடைய ரசிகர்கள் கர்வத்துடன் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் குறித்து ப்ளூ சட்டை மாறன் நக்கலாக ஒரு பதிவை தன்னுடைய ட்விட்டர் தளத்தில் போட்டுள்ளார். எப்போதும் யாரைப் பற்றியாவது புறணி பேசி வரும் ப்ளூ சட்டை மாறனுக்கு பிரபலமாக இருப்பவர்களை டார்கெட் செய்வதுதான் ஒரே வேலை. அந்த வகையில் இவர் முன்னணி நடிகர்கள் பலரையும் கிண்டல் அடித்து வருகிறார். இதற்காக ரசிகர்களிடமும் நன்றாக அவர் வாங்கி கட்டிக் கொள்வார்.

Also read: ரஜினியை தன் பாணியில் மிரட்டி பணிய வைத்த கேப்டன்.. பதறிப் போய் இறங்கி வந்த சூப்பர் ஸ்டார்

அதேபோல் இப்போது பாபா படத்தின் ரிலீஸ் பற்றி பேசி இருக்கும் அவர் சக்சஸ் மீட் நிகழ்ச்சிக்காக காத்திருக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். இதை பார்த்த ரஜினி ரசிகர்கள் அவரை வண்டை வண்டையாக கிழித்து வருகின்றனர். மேலும் எத்தனை வருடம் கழித்து வந்தாலும் இந்த படம் மாஸாக தான் இருக்கும், கலெக்சனும் வேற லெவலில் இருக்கும் என அவர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

அது மட்டுமல்லாமல் ப்ளூ சட்டை மாறனின் ஆன்ட்டி இந்தியன் திரைப்படத்தை பற்றியும் அவர்கள் கழுவி ஊற்றி வருகின்றனர். தற்போது பாபா படத்தின் ரீலீஸ் எதிர்பார்ப்பை கிளப்பிய நிலையில் ப்ளூ சட்டை மாறனின் இந்த தேவையில்லாத பேச்சு கடும் கண்டனத்தை ஏற்படுத்தி உள்ளது. விரைவில் அவருடைய பேச்சுக்கு பதிலடி தரும் வகையில் இந்த படம் மாஸ் காட்டும் என்று ரசிகர்கள் ஆர்ப்பரித்து வருகின்றனர்.

Also read: புது பொலிவுடன் வெளியான பாபா படத்தின் டிரைலர்.. ட்விட்டரில் கூடுதல் அப்டேட் கொடுத்த சூப்பர் ஸ்டார்

Trending News