செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

கோவில் பட வடிவேலு போல பப்லு கழுத்தில் விழுந்த கம்பி.. இப்ப விடுடா பார்ப்போம்

குழந்தை நட்சத்திரமாக 1980 ஆம் ஆண்டு திரையுலகில் அறிமுகமாகி 200 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் பப்லு பிரித்திவிராஜ். அஜித், சிமரன் நடிப்பில் வெளியான அவள் வருவாளா படத்தின் மூலம் வில்லனாக மக்கள் மத்தியில் பிரபலமானவர்.

பப்லு  பல திரைப்படங்களில் வில்லனாகவும், குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர் வாரணம் ஆயிரம், பயணம், அழகன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சியில் பப்லு பங்குபெற்றார். அவருக்கு ஜோடியாக உமா ரியாஸ் நடனம் ஆடினார். அப்போது சிம்புவுக்கும், பப்லுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் இணையத்தில் பேசுபொருளாக ஆனது. இதைத்தொடர்ந்து பப்லு ஜெயா டிவியில் சவால் நிகழ்ச்சியை 5 ஆண்டுகளுக்கு மேலாக வெற்றிக்கரமாக நடத்தினார்.

சின்னத்திரையில் ராதிகாவின் தொடர்கலான அரசி, வாணி ராணி தொடர்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கண்ணான கண்ணே தொடரில் நடித்து வருகிறார். இத்தொடரில் கதாநாயகிக்கு தந்தையாக நடித்துள்ளார்.

babloo-gym-workout
babloo-gym-workout

சின்னத்திரை தொடர்களில் நடிப்பதுடன் பெசன்ட் நகரில் சா ரீப்ளிக் டீக்கடையை நடத்தி வருகிறார். உடலை கட்டுக் கோப்பாக வைத்திருக்க ஏகப்பட்ட ஃபிட்னஸ் பயிற்சிகளை தொடர்ந்து பப்லு செய்து வருகிறார். தினமும் தீவிர உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக வைத்துள்ளார்.

சமீபத்தில் ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தபோது எதிர்பாரத விதமாக கம்பி அவரது கழுத்திலே விழுந்தது. இது தொடர்பான வீடியோ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த உள்ளார் பப்லு, அத்துடன் நான் நலமாக இருக்கிறேன் என்றும் யாரும் கவலைப்பட வேண்டாம் என பதிவிட்டிருந்தார்.

Trending News