தமிழ் சின்னத்திரையில் தவிர்க்க முடியாத நாடகங்களில் ஒன்றாக திகழ்ந்தது தான் மௌன ராகம் சீசன் 1. இந்த சீரியல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி சிறியோர், பெரியோர் என அனைவராலும் ஈர்க்கப்பட்டது.
மேலும் இந்தத் தொடரில் நடித்த குழந்தை நட்சத்திரமான கிருத்திகா தான் இந்தத் தொடரின் வெற்றிக்கு மிகப் பெரிய சக்தி என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். அதேபோல், விஜய் டிவியில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் வெற்றிகரமாக ஒளிபரப்பான இந்த சீரியல், கடந்த செப்டம்பர் மாதம் முடிவடைந்ததோடு இதன் இரண்டாம் பாகம் அதே சேனலில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது.
தற்போது பேபி கிருத்திகா விஜய் டிவியில் ‘வேலம்மாள்’ என்னும் மற்றொரு மெகா சீரியலில் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதற்கான ப்ரோமோ வீடியோவும் வெளியாகி, ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் பேபி கிருத்திகா வெள்ளித்திரையில் முன்னணி நடிகர் ஒருவரின் படத்தில் அறிமுகமாகி இருப்பதாக தகவல்கள் கூறப்படுகிறது.
அதாவது விஷால் நடிப்பில், புதுமுக இயக்குனர் ஆனந்தன் இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில் உருவாகியுள்ள படம்தான் ‘சக்ரா’. இந்த படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரெஜினா, ரோபோ ஷங்கர், மனோபாலா, உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
மேலும் இந்த படத்தில் இடம்பெற்றுள்ள அம்மா பாடல் என்ற பாடல் சமீபத்தில் இணையத்தில் வெளியாகி, பயங்கர ட்ரெண்டாகி வருகிறது. இந்தப் பாடலில் நடிகை நீலிமா ராணிக்கு மகளாக பேபி கிருத்திகா நடித்துள்ளார். இதன்மூலம் பேபி கிருத்திகா தற்போது வெள்ளித்திரையிலும் கால் பதித்துள்ளார்.
தற்போது அம்மா பாடல் வீடியோ இணையத்தில் வைரலாகி வருவதோடு, கிருத்திகாவின் ரசிகர்களால் ரசிக்கப்பட்டு வருகிறது. மேலும் கிருத்திகா நடித்துள்ள அம்மா பாடல் வீடியோவை காண கீழே கிளிக் செய்யவும்.