Divya Bharathi: இசையமைப்பாளர் மற்றும் நடிகர் ஜிவி பிரகாஷ் பற்றி நடிகை திவ்யபாரதி முதல் முறையாக மனம் திறந்து பேசி இருக்கிறார்.
கடந்த 2021 ஆம் ஆண்டு இவர்கள் இருவரும் பேச்சிலர் படத்தில் ஒன்றாக இணைந்து நடித்தார்கள். வழக்கம் போல இந்த படமும் ஜிவி பிரகாஷுக்கு அடல்ட் மூவியாகத்தான் அமைந்தது.
முன்பே எப்போதும் இல்லாத அளவுக்கு ஹீரோயின் திவ்ய பாரதியுடன் இந்த படத்தில் எக்கச்சக்க நெருக்கமான காட்சிகள்.
அதிலிருந்து ஒரு சில வருடங்களில் ஜிவி பிரகாஷ் தன்னுடைய காதல் மனைவி சைந்தவியை பிரிவதாக அறிவித்தார்.
திவ்ய பாரதி ஓப்பன் டாக்
அந்த சமயத்தில் எல்லோருமே திவ்யபாரதி தான் இதற்கு காரணம் என்று பேச ஆரம்பித்தார்கள்.
இதற்கு பதில் அளித்திருக்கும் திவ்யபாரதி ஜிவி பிரகாஷ் சைந்தவி விவாகரத்து சமயத்தில் நான் அதிகம் பாதிப்படைந்தேன்.
நிறைய பேர் என்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் வந்து என்னை ரொம்ப மோசமாக திட்டினார்கள். உண்மையிலேயே அவர்கள் இருவரையும் ஜோடியாக பார்க்க எனக்கு ரொம்ப பிடிக்கும்.
என்னை பற்றி நெகட்டிவ்வாக வந்த கமெண்ட்களை மௌனமாக கடந்து வந்தேன் என்று பேசி இருக்கிறார்.
பேச்சிலர் படத்தை தொடர்ந்து ஜிவி பிரகாஷ் நடித்துக் கொண்டிருக்கும் கிங்ஸ்டன் படத்தின் திவ்யபாரதி தான் ஹீரோயின் என்பது குறிப்பிடத்தக்கது.