சனிக்கிழமை, ஜனவரி 18, 2025

அச்சி அசல் கடல் கன்னியாகவே மாறிய திவ்யபாரதி புகைப்படம்.. இது இடையா? இல்ல உடையா?

சினிமாவில் தற்போது வரும் புதுமுக நடிகைகள் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்து அதிக ரசிகர்களை கைவசம் வைத்துள்ளார்கள். இதற்கு முக்கிய காரணம் இவர்கள் சமூக வலைத்தளங்களில் வெளியிடும் புகைப்படங்களே. இதுவே நடிகைகளையும், ரசிகர்களையும் நெருக்கமாக வைத்திருக்கிறது.

அவ்வாறு பேச்சுலர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் திவ்யபாரதி. இவர் மாடலிங் துறையில் இருந்து வந்ததால் அவ்வப்போது கவர்ச்சிகரமான உடைகளில் புகைப்படம் எடுத்து வெளியிட்டு வருகிறார். இந்தப் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வைரலாகிறது.

திவ்யபாரதி பாலிவுட் நடிகை என பலரும் நினைக்கிறார்கள். ஆனால் அவர் கோயம்புத்தூரைச் சேர்ந்தவர். இவர் 2015 ஆம் ஆண்டில் அழகி பட்டத்தை பெற்றார். மாடல் அழகியான திவ்யபாரதி சில விளம்பரங்களிலும் நடித்துள்ளார். அதன்பிறகு பேச்சிலர் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.

ஜிவி பிரகாஷின் கதாநாயகியாக நடித்த திவ்யபாரதி இளைஞர்களின் கனவுக் கன்னியாக வலம் வருகிறார். தற்போது கடல் கன்னி போல சிவப்பு நிற உடையில் போட்டோ ஷூட் எடுத்த அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் ரசிகர் மத்தியில் ட்ரெண்டாகி வருகிறது.

திவ்யபாரதிக்கு பேச்சுலர் படத்தின் வெற்றியை தொடர்ந்து பல பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. தற்போது வெப்பம் பட இயக்குனர் அஞ்சனா அலிகான் இயக்கிவரும் மதில் மேல் காதல் படத்தில் நடித்து வருகிறார். திவ்யா இவ்வளவு பிஸியாக உள்ள போதும் ஹாட் புகைப்படங்கள் எடுத்து வெளியிட்டு வருகிறார்.

dhivya-bharathi
dhivya-bharathi

இன்ஸ்டாகிராமில் படு ஆக்டிவாக இருக்கும் திவ்யபாரதியை 1.3 மில்லியன் ரசிகர்கள் பின் தொடர்கிறார்கள். கவர்ச்சி உடை மட்டுமின்றி தாவணி, புடவை என அனைத்து வித உடைகளிலும் அழகை வெளிப்படுத்தும் திவ்யபாரதியின் இந்த கடல் கன்னி புகைப்படம் ரசிகர்களை வெகுவாக ஈர்த்துள்ளது.

divya-bharathi
divya-bharathi

Trending News