ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 19, 2025

அவங்க போடுற டிரஸ் எனக்கு புடிக்கல.. மட்டமான காரணத்தை சொல்லி நாமினேட் செய்த விசித்ரா

Biggboss 7-Vichitra: பிக்பாஸ் எப்போது தொடங்கும் என்று காத்திருந்த ரசிகர்கள் இப்போது குதூகலத்துடன் இருக்கின்றனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை கோலாகலமாக ஆரம்பித்த இந்த நிகழ்ச்சி ஒவ்வொரு நாளும் சுவாரசியமாக சென்று கொண்டிருக்கிறது.

அதிலும் நேற்று நடந்த நாமினேஷன் இப்போது சோஷியல் மீடியாவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அதில் கவர்ச்சி நாயகி விசித்ரா மட்டமான ஒரு காரணத்தை சொல்லி இருந்தது இப்போது பூதாகரமாக வெடித்துள்ளது. அதாவது அவர் ஐசுவை நாமினேட் செய்திருந்தார்.

Also read: பிக் பாஸ் 7 டைட்டில் வின்னர் இந்த மூணு பேர்ல ஒருத்தர் தான்.. கவின் விட்டதை பிடிக்கும் உயிர் நண்பன்

எதற்காக என்றால் அவர் உடை அணியும் விதம், உட்காருவது, மேக் அப் போன்ற விஷயங்கள் சரியாக இல்லை என்று விசித்ரா கூறியிருந்தார். அது மட்டுமல்லாமல் வீட்டில் சின்ன வயசு பசங்க, பெரியவங்க என எல்லாரும் இருக்கிறோம். அதனால் உடை விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும்.

அந்த வகையில் ஐசுவின் இந்த நடவடிக்கை எனக்கு ஏற்புடையதாக இல்லை என்று கூறியிருந்தார். இதுதான் இப்போது பெரும் சர்ச்சையாக வெடித்திருக்கிறது. தற்போது விசித்ராவுக்கு எதிராக கமெண்ட்டுகளை கொடுத்து வரும் ரசிகர்கள் நீங்கள் கூட ஒரு காலத்தில் அரையும் குறையுமாக ஐட்டம் டான்ஸ் ஆடியவர் தான்.

Also read: எகிற போகும் டிஆர்பி, என்ட்ரி கொடுக்கும் தலைவி.. எதிர்பாராததை எதிர்பார்க்க வைத்த பிக்பாஸ்

இந்த வயதிலும் பக்குவம் இல்லாமல் இப்படி ஒரு காரணத்தை சொல்லி உங்கள் மரியாதையை கெடுத்துக் கொள்ளாதீர்கள் என்று கொந்தளித்து வருகின்றனர். மேலும் பிக்பாஸ் முன்னாள் போட்டியாளரான சனம் செட்டி இந்த விவகாரம் குறித்து தன்னுடைய கோபத்தை வெளிப்படையாகவே காட்டி இருக்கிறார்.

அந்த வகையில் நீங்கள் கண்ணை மூடிக்கொண்டு உங்கள் வீட்டுக்கே சென்று விடுங்கள். இதை நிச்சயம் நாங்கள் எதிர்பார்க்கவில்லை என அவர் தன் ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் போட்டுள்ளார். இப்படியாக வெறுப்பை சம்பாதித்துள்ள விசித்ரா விரைவிலேயே பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

Also read: ரெண்டுல ஒன்னு பாக்கலாமா.. களைகட்ட போகும் பிக்பாஸ் சீசன் 7, கிராண்ட் லான்ச் எப்போது தெரியுமா?

Trending News