வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

சிவகார்த்திகேயனை விடாமல் துரத்தும் ஏழரை.. பழையபடி அமரனை பிடித்துக் கொண்ட வேதாளம்

சிவகார்த்திகேயன் நடித்த அமரன் படம் ஹிட்டால் இன்று அவரது சம்பளம் 75 கோடிகள் வரை உயர்ந்துள்ளது. இதற்கு முன்னர் அவர் 40 இல் இருந்து 45 கோடிகள் வரை வாங்கிக் கொண்டு இருந்தார். ஆனால் இந்த இடத்துக்கு வருவதற்கு அவர் பல கஷ்டங்களை தாண்டி வந்துள்ளார்.

காக்கிச்சட்டை, சீமராஜா, ஹீரோ, மிஸ்டர் லோக்கல் என அடுத்தடுத்த படங்கள் அவருக்கு ஃபிளாப் ஆனது. ஒவ்வொரு படம் ரிலீஸ் நேரத்திலும் ஏதாவது ஒரு பிரச்சனை அவருக்கு வந்துவிடும். முந்தைய படங்களுக்கு வாங்கிய கடனால் புது படங்களுக்கு பிரச்சனை ஏற்படும்.

ரிலீஸ் நேரத்தில் வரும் பிரச்சனையை சமாளிக்க வேறு ஒருவருக்கு கால் சீட் கொடுத்தும், கடன் பெற்றும் அப்போதைக்கு அந்த பிரச்சனையை சமாளித்து வந்தார் சிவகார்த்திகேயன். இப்படி நாளடைவில் அவருக்கு 50 கோடிக்கு மேல் கடனாகியது. டாக்டர், டான் போன்ற படங்கள் ஹிட் அடித்தும் அவர் கடன் ஓய்ந்தபாடில்லை.

இப்பொழுது சுமார் 360 கோடிகள் அமரன் படம் வசூலித்தது. இந்த படத்திற்கு சிவகார்த்திகேயனுக்கு வெறும் சம்பளம் மட்டும் தான். பழைய கடனை கொடுப்பதற்கு பாதியை இழந்துவிட்டார். இப்பொழுது அவருக்கு புது பிரச்சனை வந்து சேர்ந்துள்ளது. ஏற்கனவே அயலான் படம் ரிலீஸ் நேரத்தில் சிவகார்த்திகேயனுக்கு 75 கோடி ரூபாய் தேவைப்பட்டது.

அப்பொழுது பேஷன் ஸ்டுடியோஸ் சுதன் சுமார் 25 கோடிகள் கொடுத்து அவருக்கு உதவியுள்ளார். அந்த பணத்தை அடுத்த படத்திற்கு அட்வான்ஸ் என்ற கணக்கில் வாங்கிக் கொண்டார் சிவா. ஆனால் அடுத்தடுத்த பிராஜெக்ட்களால் இன்று வரை சுதனுக்கு கால்ஷீட் கொடுக்கவில்லை.

இப்பொழுது பேஷன் ஸ்டுடியோஸ் சுதன் சிவகார்த்திகேயனுக்கு நெருக்கடி கொடுத்து வருகிறார். இந்த டிசம்பரில் கால் சீட் கொடுப்பதாக சிவா கூறியிருந்தார். அதனால் இன்று வரை அமைதியாக இருந்தவர் இப்பொழுது சிவகார்த்திகேயனின் நெருக்கடி கொடுத்து வருகிறார்.

Trending News