வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

முதல்முறையாக உருப்படியான விஷயத்தை செய்த பாக்யா.. குடும்பமே எதிராக நின்னாலும் சப்போர்ட்டாக பேசும் மருமகள்கள்

Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், கோபிக்கு ஜாமீன் கிடைத்தாலும் பாக்யா, கோபி மீது கொடுத்த கேசை வாபஸ் வாங்காமல் அவ்வளவு ஈசியாக கோபி நிம்மதியாக இருக்க முடியாது. இதனால் செழியன் வீட்டுக்கு வந்து பாக்யாவிடம் அப்பா மீது கொடுத்த கேசை வாபஸ் வாங்குங்க. இனி அப்பா உனக்கு எந்தவித கெடுதலையும் செய்ய மாட்டார். அதற்கு நான் பொறுப்பு என்று சொல்கிறார்.

அதே மாதிரி ஈஸ்வரியும், கோபி செய்தது தவறுதான் அதற்கு ஏற்ற மாதிரி நான் நல்லா திட்டி புத்திமதி சொல்கிறேன். இனி அவன் உன்னை கஷ்டப்படுத்தும் படி எந்த விஷயத்தையும் பண்ண மாட்டான். அதனால் கொடுத்த கேசை வாபஸ் வாங்கு என்று சொல்கிறார். அதே மாதிரி இனியாவும், அப்பா பாவம் எனக்கு அப்பாவை பார்க்கவே கஷ்டமாக இருக்கிறது என்று சொல்லி பாக்யாவிடம் கெஞ்சுகிறார்.

ஆனால் யார் என்ன சொன்னாலும் சரி நான் கொடுத்த கேசை வாபஸ் வாங்க மாட்டேன் என்று சொல்லிவிட்டார். பாக்கியா எடுத்த முடிவில் முதல் முறையாக உறுதியாக நின்று மொத்த குடும்பத்தையும் எதிர்க்க துணிந்து விட்டார். தற்போது இவ்வளவு பேச்சு பேசும் செழியன், பாக்யா ஹோட்டல் பிரச்சினையில் சிக்கித் தவிக்கும் போது பணத்தை கொடுத்து உதவாமல் சுயநலமாக தான் இருந்தார்.

அப்பொழுது எதுவும் பேசாத செழியன் இப்பொழுது மட்டும் ஏன் அப்பாவுக்கு சப்போர்ட் பண்ணி பேசுவது கடுப்பாக இருக்கிறது. அதனால் பாக்கியா, அதிரடியான முடிவை எடுக்கும் விதமாக இனியா, செழியன் மற்றும் ஈஸ்வரி இந்த மூன்று பேரையும் சேர்த்து கோபி கூடவே வெளியே அனுப்பி விட்டால் இன்னும் நன்றாக இருக்கும். ஆனால் யார் என்ன சொன்னாலும் என்னுடைய சப்போர்ட் அத்தை பக்கம் தான் என்று ஜெனி ஒவ்வொரு முறையும் நிரூபித்துக் காட்டி வருகிறார்.

அடுத்ததாக பாக்கியா பத்திரிகையாளர்களிடம் சொன்ன விஷயத்தையும் தாண்டி ராதிகாவையும் உள்ளே இழுத்து ராதிகாவின் கேரக்டரை டேமேஜ் பண்ணும் அளவிற்கு டிவியில் ஒளிபரப்பு செய்து விட்டார்கள். இதனை பார்த்த ராதிகா வீட்டிற்கு வந்த கோபியிடம் சண்டை போடுகிறார். உடனே கோபி மற்றும் ராதிகாவின் அம்மா இருவரும் சேர்ந்து பாக்கியாவிடம் சவால் விடும் விதமாக சண்டை போட ஆரம்பித்து விட்டார்கள்.

அந்த வகையில் பாக்கியவுடன் நேரடியாக மோதும் விதமாக கோபி துணிந்து விட்டார். இதை எல்லாம் தாண்டி இனியா, ராதிகாவை பார்த்து நீங்கள் எங்க அப்பாவுடைய வாழ்க்கையில் வருவதற்கு முன் நாங்கள் குடும்பமாக சந்தோஷமாக இருந்தோம். நீங்க வந்த பிறகு தான் எங்களுடைய சந்தோசமும் நிம்மதியும் போய்விட்டது என்று கூறுகிறார். இனியாவுக்கு கோபியை தவிர மற்றவர்கள் எல்லாருமே தவறானவர்கள் என்பது போல் நினைப்பு. ஆனால் உண்மையில் சொன்னால் கோபி வந்த பிறகுதான் ராதிகா மற்றும் பாக்கியவின் வாழ்க்கை குட்டிச்சுவராக போய்விட்டது.

Trending News