வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

எங்க சிங்கத்தை அசிங்கப்படுத்திட்டியே நெல்சா.. ஜெயிலர் வீடியோவை பார்த்துட்டு கொத்து பரோட்டா போட்ட பயில்வான்

Jailer-Nelson: ஜெயிலர் படம் வெளிவருவதற்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் ரசிகர்கள் ஒவ்வொரு நாளையும் மிகப்பெரும் எதிர்பார்ப்போடு நகர்த்தி வருகின்றனர். ஏற்கனவே இசை வெளியீட்டு விழாவில் தலைவரின் பேச்சு ரகளையாக இருந்த நிலையில் நேற்று வெளியான ஷோகேஸ் வீடியோ சோசியல் மீடியாவை கலக்கிக் கொண்டிருக்கிறது.

அந்த வீடியோவை பார்த்த பலரும் தலைவரை கொண்டாடி வரும் நிலையில் பயில்வான் ரங்கநாதன் மட்டும் தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். அது மட்டுமல்லாமல் எங்கள் சிங்கத்தை இப்படி அசிங்கப்படுத்திட்டியே நெல்சா என இயக்குனரையும் கொத்து பரோட்டா போட்டு இருக்கிறார்.

Also read: ஜெயிலர் படத்திற்கு நடிகர், நடிகைகள் வாங்கிய சம்பள லிஸ்ட்.. தலை தப்புமா என்ற பயத்தில் கலாநிதி மாறன்

அதாவது அந்த வீடியோவில் ரஜினி பூனையாக இருந்து புலியாக மாறுவது போல் காட்டப்பட்டு இருக்கும். அதன் ஆரம்பத்தில் சூப்பர் ஸ்டார் தன் மகன் மற்றும் பேரனுக்கு ஷூ துடைப்பது போல் காட்சி இடம்பெற்று இருந்தது. அதைத்தான் பயில்வான் கண்டபடி விமர்சித்து இருக்கிறார்.

சிங்கம் போல் இருந்த சூப்பர் ஸ்டாரை இப்படி ஷூ துடைக்க வைப்பதா என்றும் அவர் என்ன கிறிஸ்துவ பாதிரியாரா பாத பூஜை செய்வதற்கு என்றும் கேள்வி எழுப்பி இருக்கிறார். மேலும் அந்த வீடியோவில் சிவராஜ்குமார், மோகன்லால் இடம்பெறாதது குறித்தும் தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

Also read: இந்த 3 படங்களின் மொத்த கலவைதான் ஜெயிலர்.. கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றி தட்டி தூக்கிய நெட்டிசன்கள்

அது மட்டும் இன்றி சூப்பர் ஸ்டார் தான் இந்த படத்தின் ஹீரோ, ஆனால் அவரை வயதான கிழவன் போல் காட்டிவிட்டதாகவும் ஒரு குற்றச்சாட்டை எழுப்பியுள்ளார். இப்படி பல அதிருப்திகளை தெரிவித்த பயில்வான் இது சூப்பர் ஸ்டார் ரசிகர்களுக்கு வேண்டுமானால் பிடிக்கலாம் ஆனால் மற்ற ரசிகர்களுக்கு கேலியாகத்தான் இருக்கும் என்ற குண்டையும் தூக்கிப் போட்டுள்ளார்.

ஏற்கனவே பீஸ்ட் படத்தின் சொதப்பலால் ஜெயிலர் படம் எப்படி வரப்போகிறதோ என பல விமர்சனங்கள் நெல்சன் மேல் எழுந்தது. இந்நிலையில் பயில்வான் தன் பங்குக்கு இவரை சின்னாபின்னமாக்கி இருப்பது சில விவாதங்களையும் முன் வைத்துள்ளது. அந்த வகையில் தலைவர் எப்படி இருந்தாலும் படம் ஹிட் அடிக்கும் என பயில்வானின் இந்த விமர்சனத்திற்கு ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

Also read: ஜெயிலர் பட மீதான நம்பிக்கையால் துணிந்து மோதும் சன் பிக்சர்ஸ்.. சொந்த ஊரில் ஆட்டம் போடா ரெடியாகும் ரஜினி

Trending News