வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

2 பொண்டாட்டி இருந்தும் மரணப்படுக்கையில் பார்த்துக்க கூட ஆளில்லை.. வேதனையுடன் பேசிய பயில்வான்

சினிமா பிரபலங்களின் அந்தரங்க விஷயங்களை வெளிப்படையாக தனது யூடியூப் சேனலில் பேசி வருபவர் பயில்வான் ரங்கநாதன். இவருடைய பேச்சால் பல சர்ச்சைகளும் எழுந்துள்ளது. ஆனாலும் தொடர்ந்து பயில்வான் இவ்வாறு பேசுவதை நிறுத்திய பாடு இல்லை. ஆனால் இப்போது ஆச்சரியம் தரும் விதமாக வேதனையுடன் ஒரு கருத்தை தெரிவித்துள்ளார்.

பிரபலம் ஒருவர் இரண்டு திருமணம் செய்து கொண்டாலும் மரணப் படுக்கையில் இருக்கும் போது யாரும் அவரைப் பார்த்துக் கொள்ள இல்லை என்பதை வேதனையுடன் கூறியிருக்கிறார். பயில்வானே ஒருவரைப் பற்றி இவ்வளவு உருக்கமாக பேசி இருக்கிறார் என்றால் அது மிகவும் ஆச்சரியமான விஷயம்தான்.

Also Read : எஸ்ஏசி-யை வைத்து விஜய்யை நக்கல் செய்த பயில்வான்.. ஜோடியை மாத்துற மாதிரி அதையும் மாத்துறீங்களா!

அதாவது நேற்றைய தினம் ரசிகர்களை உலுக்கியது சரத்பாபுவின் மரணம். பாலச்சந்தரின் நிழல் நிஜமாகிறது படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான சரத்பாபு கிட்டத்தட்ட 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். உடல்நிலை பிரச்சனை காரணமாக ஹைதராபாத்தில் தனியார் மருத்துவமனையில் சரத் பாபு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் நேற்றைய தினம் சிகிச்சை பலனளிக்காமல் சரத்பாபு உயிரிழந்து விட்டார். இப்போது பயில்வான் தனது யூடியூப் சேனலில் சரத்பாபு பற்றி பேசி இருந்தார். அதாவது படத்தில் அவரை எப்படி நாம் பார்க்கிறோமோ, அதேபோல் தான் நிஜத்திலும் அவருடைய குணம். மிகவும் சாதுவாக இருக்கக்கூடியவர், எல்லோரிடமும் பாரபட்சம் பார்க்காமல் பழகுவார்.

Also Read : நடிப்பில் சிகரம் தொட்ட சரத்பாபு.. மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

மேலும் சரத் பாபு இரண்டு திருமணம் செய்து கொண்டுள்ளார். முதலாவதாக நடிகை ரமா பிரபாவை திருமணம் செய்தார். ஆனால் இவர்கள் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விட்டனர். அதாவது சமரசமாக தான் இந்த முடிவை இருவரும் ஏற்றுக் கொண்டார்கள்.

அதன்பின்பு வில்லன் நடிகர் நம்பியாரின் மகள் சினேகலதா தீட்சித் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு மேலாக ஒன்றாக வாழ்ந்த நிலையில் கடைசியில் இவர்களும் பிரிந்து விட்டனர். ஆகையால் கடைசியில் மரணப்படுக்கையில் இருக்கும் போது இரண்டு திருமணம் செய்து கொண்டும் பார்த்துக்க அவர்கள் இல்லாமல் தனி ஆளாக சரத் பாபு அவதிப்பட்டு உள்ளார் என பயில்வான் கூறியுள்ளார்.

Also Read : உயிர் நண்பன் சரத்பாபு உடன் ரஜினி வெற்றி கண்ட 6 படங்கள்.. ஜமீன்தாரை வைத்து அம்பலத்தானுக்கு வைத்த ஆப்பு

Trending News