ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

புருஷனே ஊத்தி கொடுத்த கொடுமை.. மதுப்பழக்கத்திற்கு அடிமையான நடிகை, வெட்ட வெளிச்சமாக்கிய பயில்வான்

Bayilvan Ranganathan: சினிமா விமர்சகர் பயில்வான் ரங்கநாதன் நடிகர், நடிகைகளை பற்றிய அந்தரங்க விஷயங்களை தனது யூடியூப் வாயிலாக தொடர்ந்து கூறி வருகிறார். அந்த வகையில் ஒரு காலகட்டத்தில் கொடிகட்டி பறந்த நடிகை ஒருவர் தானே குடிப்பதாக வெளிப்படையாக கூறியிருக்கிறார்.

அதுவும் தான் மது பழக்கத்திற்கு அடிமையாக தனது கணவர் தான் காரணம் என்று சொல்லி உள்ளதாக பயில்வான் கூறி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார். மேலும் அந்த நடிகை மாமியாருடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக முதல் கணவரை விவாகரத்து செய்துவிட்டு மறுமணமும் செய்து கொண்டார்.

Also Read : கவுண்டமணிக்கு எதிராக களம் இறக்கப்பட்ட காமெடி நடிகர்.. பயில்வான் சொன்ன சீக்ரெட்

அதாவது சிரிப்பிலேயே ரசிகர்களை கிரங்கடிக்க கூடியவர் தான் நடிகை ஊர்வசி. எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் பிச்சு உதறி விடுவார். இவருடன் நடிக்கும் போது சில சமயங்களில் கமலே தடுமாறி விடுவாராம். ஏனென்றால் ஸ்கிரீனில் ஊர்வசி இருந்தால் மொத்த ஸ்கோரையும் அவரே எடுத்திடுவார்.

இப்படிப்பட்ட நடிகை கடந்த 2000 ஆண்டு மனோஜ் கே ஜெயன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் ஊர்வசியின் கணவர் குடும்பத்தினர் எல்லோருக்குமே மது அருந்தும் பழக்கம் இருக்கிறதாம். அதனால் தனது கணவரே தனக்கு ஊத்தி கொடுத்து மது குடிக்க சொல்லி இருக்கிறார். அப்படிதான் எனக்கு குடிப்பழக்கம் ஏற்பட்டது.

Also Read : எல்லா கதாபாத்திரத்தையும் அடிச்சு நொறுக்கும் 5 ஹீரோயின்கள்.. நாசருக்கு சவால் விடும் ஊர்வசி

இதை சொல்வதில் எனக்கு எந்த கூச்சமும் இல்லை என்று ஊர்வசியை சொன்னதாக பயில்வான் கூறியிருக்கிறார். அதன் பிறகு மனோஜ் கே ஜெயனின் அம்மா மற்றும் ஊர்வசி இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இந்த நாள் முதல் கணவரிடம் விவாகரத்து பெற்று 2013 ஆம் ஆண்டு சிவப்பிரசாந்த் என்பவரை ஊர்வசி திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இப்போது ஊர்வசி சந்தோஷமாக வாழ்ந்து வரும் நிலையில் படங்களிலும் பிஸியாக இருக்கிறார். கடைசியாக அவரது நடிப்பில் வீட்ல விசேஷம் படம் வெளியாகி ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தது. மேலும் தொடர்ந்து ஊர்வசி படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

Also Read : நகைச்சுவையில் பின்னி பெடலெடுத்த 5 நடிகைகள்.. திரிபுரசுந்தரி ஆக ஊர்வசி அடித்த லூட்டி

- Advertisement -

Trending News