வெள்ளிக்கிழமை, ஜனவரி 17, 2025

இந்த ரஜினி பாட்டு உங்களுக்காக எழுதியது தான் தளபதி.. சரமாரியாக வறுத்தெடுத்த பயில்வான்

Rajini, Vijay: சினிமா விமர்சகர் பயில்வான் ரங்கநாதன் இப்போது விஜய்யை விமர்சிக்கும் விதமாக ஒரு வீடியோ போட்டு இருக்கிறார். அதுவும் ரஜினி பாடலை வைத்து இது கண்டிப்பாக விஜயை கிண்டல் செய்யும் விதமாகத்தான் இருக்கிறது என 100 சதவீதம் அடித்த சொல்கிறார். அதாவது விஜய் இப்போது லியோ படத்தில் நடித்து உள்ளார்.

மேலும் அவர் அரசியலில் களம் காண உள்ளது கிட்டத்தட்ட உறுதி ஆகிவிட்டது. ஆனாலும் சினிமாவில் சூப்பர் ஸ்டார் என்ற பட்டம் விஜய்க்கு தான் கிடைக்க வேண்டும் என்று அவரது ரசிகர்கள் ஆசைப்படுகிறார்கள். இதனால் ரஜினி தாண்டி பல நடிகர்களின் ரசிகர்களுமே விஜய் மீது கடும் கோபத்தில் இருக்கிறார்கள்.

Also Read : யாருப்பா அடுத்த சூப்பர் ஸ்டார்.? விஜய்யையும் , எஸ்.ஏ.சி-யையும் வச்சி செய்த ஜெயிலர் பட ஹூக்கும் பாடல்

இந்நிலையில் சமீபத்தில் ஜெயிலர் படத்தின் செகண்ட் சிங்கிள் வெளியானது. இதில் உங்கப்பன் விசிலை கேட்டவன், உன் மவனும் பேரனும் ஆட்டம் போட வைப்பேன், உன் அலும்ப பார்த்தவன் என்ற வரிகள் இடம் பெற்றிருந்தது. இந்த பாடல் வரிகள் நேரடியாகவே விஜய்யை தாக்கி தான் வைக்கப்பட்டிருக்கிறது என பயில்வான் கூறியிருக்கிறார்.

அதுமட்டுமின்றி இப்போது விஜய் அரசியலில் இறங்க உள்ளார் ஆனால் அவருக்கு ஓட்டு போட யாரும் தயாராக இல்லை என்று விளாசி உள்ளார் பயில்வான். அதாவது சூப்பர் ஸ்டார் சர்ச்சையில் இருந்தே ரஜினி ரசிகர்கள் விஜய் மீது மிகுந்த கடுப்பில் இருக்கிறார்கள். ரஜினி ரசிகர்களின் வாக்கு விஜய்க்கு விழாது.

Also Read : விஜய்க்கு அடுத்து சிவகார்த்திகேயன் தான்.. மொத்த பெயரையும் சல்லி சல்லியா உடைச்சிட்டாங்களே

அடுத்ததாக சொல்லவே வேண்டாம் அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் இடையே இணையத்தில் ஒரு போறே போய்க் கொண்டிருக்கிறது. அப்படி இருக்கும்போது விஜய்யை முதல்வராகி பார்க்க அஜித் ரசிகர்கள் ஆசைப்படுவார்களா. போதாகுறைக்கு சூர்யா ரசிகர்களுக்கும் விஜய் ரசிகர்களுக்கும் பிரச்சனை இருந்து வருகிறது.

இப்படி எல்லா நடிகர்களிடமும் பஞ்சாயத்து இருப்பதால் அவருக்கு ஓட்டு போடா அவரது ரசிகர்கள் மட்டுமே இருப்பார்கள். இதில் எப்படி அவரால் ஜெயிக்க முடியும் என பயில்வான் ரங்கநாதன் பேசி இருக்கிறார். அவர் பேசிய வீடியோ இணையத்தில் அதிக பெயரால் பார்க்கப்பட்டு வருகிறது.

Also Read : 300 கோடி நஷ்டத்தை ஈடு கட்டிய மலையாள படம்.. விஜய் சேதுபதியை வைத்து லைக்கா போடும் பலே ஸ்கெட்ச்

Trending News