புதன்கிழமை, ஜனவரி 15, 2025

பட டைட்டில் தான் விஜய் ஆண்டனியை பழி வாங்கியது.. எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றிய பயில்வான்

Vijay Antony: பயில்வான் ரங்கநாதன் சினிமா விமர்சகர் என்ற பெயரில் நடிகர், நடிகைகளின் அந்தரங்க விஷயங்களை தான் யூடியூபில் பேசிக்கொண்டிருந்தார். ஆனால் இப்போது பணத்திற்கு ஆசைப்பட்டு கீழ்த்தரமான வேலையில் இறங்கி இருப்பது ரசிகர்களை எரிச்சல் அடைய செய்துள்ளது. அதாவது சமீபத்தில் இயக்குனர் மற்றும் நடிகருமான மாரிமுத்து மாரடைப்பால் உயிரிழந்தார்.

இந்த சூழலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாரிமுத்து தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது ஜோதிடர்களை தரைகுறைவாக பேசி இருந்தார். அதனால் தான் அவர் உயிரிழந்ததாக பயில்வான் கூறியது கடும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இதைத்தொடர்ந்து சமீபத்தில் இசையமைப்பாளர் மற்றும் நடிகருமான விஜய் ஆண்டனியின் மகள் மீரா தற்கொலை செய்து கொண்டார்.

Also Read : விஜய் ஆண்டனியின் மகள் மீராவை பற்றி பயில்வான் வெளியிட்ட தகவல்.. ஆண்டவனுக்கே வெளிச்சம்!

இதைப் பற்றி பயில்வான் சொன்ன விஷயம் தான் எல்லோரையும் எரிச்சல் அடைய செய்திருக்கிறது. அதாவது கடந்த ஒரு வருடங்களாகவே மன அழுத்தத்தில் இருந்த மீரா அதற்கான சிகிச்சையை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் அவரின் போனை பறிமுதல் செய்த போலீசார் சில குறுஞ்செய்திகளை பார்த்திருக்கிறார்கள்.

அதில் இரண்டு மருத்துவர்களுக்கு உடனடியாக தனக்கு ஆலோசனை வேண்டும் எப்போது அப்பாயிண்ட்மெண்ட் கிடைக்கும் என்று மீரா கேட்டிருக்கிறார். இருவருமே ஒரு குறிப்பிட்ட நாளை கொடுத்திருக்கிறார்கள். ஆனால் அதற்குள் மிகுந்த மன அழுத்தம் காரணமாக மீரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Also Read : மீரா எப்படிப்பட்ட பொண்ணு தெரியுமா.? உருகும் நட்பு வட்டாரம், விஜய் ஆண்டனிக்கு தீரா வேதனையை கொடுத்த மகள்

மேலும் பயில்வான் கூறுகையில் நல்ல வார்த்தைகளை பேச வேண்டும் சில விஷயங்கள் பழித்து விடும் என்று பெரியவர்கள் சொல்வார்கள். அந்த வகையில் விஜய் ஆண்டனியின் படங்களை எடுத்துக் கொண்டால் பிச்சைக்காரன், பிச்சைக்காரன் 2, கொலைகாரன், ரத்தம், எமன் என்று வைத்திருந்தார். அவருடைய பட டைட்டில் கூட பழிவாங்க வாய்ப்பிருக்கிறது என பயில்வான் கூறியிருக்கிறார் .அதேபோல் தான் ரஜினி காளி படத்தில் நடித்த போது சண்டைக் காட்சியில் ஏழு பேருக்கு படுகாயம் அடைந்தது.

மேலும் சிவக்குமார் பத்ரகாளி என்ற படத்தில் நடித்த போது அந்த படத்தின் கதாநாயகி ராணி சந்திரா விமான விபத்து மூலம் உயிரிழந்தார். இவ்வாறு பட டைட்டிலும் சிலரது வாழ்க்கையை தலைகீழாக மாற்றும். இதை நம்பிக்கை என்றும் சொல்லலாம் மூடநம்பிக்கை என்றும் சொல்லலாம் என்று பயில்வான் கூறியிருந்தார். எவன் எப்படி போனால் என்ன, தனக்கு காசு தான் முக்கியம் என்பது போல ஒருவரின் வேதனையில் இவ்வாறு பயில்வான் ரங்கநாதன் பேசியிருப்பது ரசிகர்களுக்கு கோபத்தை உண்டாக்கி இருக்கிறது.

Also Read :  16 வயதில் விபரீதத்தை தேடிய மீரா, மன அழுத்தம் வர என்ன காரணம்.? ஆதாரத்தோடு பயத்தை காட்டிய மனநல மருத்துவர்

Trending News