திங்கட்கிழமை, ஜனவரி 6, 2025

விஜய் ஆண்டனியின் மகள் மீராவை பற்றி பயில்வான் வெளியிட்ட தகவல்.. ஆண்டவனுக்கே வெளிச்சம்!

Vijay Antony: நேற்றைய தினம் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் இசையமைப்பாளர் மற்றும் நடிகருமான விஜய் ஆண்டனியின் மகள் மீராவின் இறப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. பதினாறு வயதே நிரம்பிய மீரா பனிரெண்டாம் வகுப்பு படித்து வரும் நிலையில் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியானது.

இந்த சூழலில் மீராவின் இறுதி அஞ்சலிக்கு வந்த பலர் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ள வேண்டாம் என்று பல அறிவுரைகள் கூறியிருந்தார்கள். இந்நிலையில் சினிமா விமர்சகர் பயில்வான் ரங்கநாதன் மீராவை பற்றிய விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார். அதாவது தனிப்பட்ட முறையில் விஜய் ஆண்டனி மற்றும் பாத்திமாவை தனக்கு நன்கு தெரியும் என்று கூறி இருக்கிறார்.

Also Read : மீரா எப்படிப்பட்ட பொண்ணு தெரியுமா.? உருகும் நட்பு வட்டாரம், விஜய் ஆண்டனிக்கு தீரா வேதனையை கொடுத்த மகள்

அதுவும் பாத்திமா ஆரம்பத்தில் தொகுப்பாளராக சன் டிவியில் வேலை பார்த்திருக்கிறார். அப்போது என்னையும் பேட்டி எடுத்துள்ளார். விஜய் ஆண்டனி, பாத்திமா இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவருக்கு மீரா மற்றும் லாரா என்ற இரண்டு மகள்கள் உள்ளார்கள். பொதுவாக சினிமாவில் உள்ள பெரிய நட்சத்திரங்களான ரஜினி, கமல் போன்றவர்களுக்கு இரண்டு மகள்கள் தான்.

அதேபோல் விஜய் ஆண்டனிக்கும் இரண்டு மகள்கள். ஆனால் மீரா என்பது சுத்த தமிழ் பெயர். ஆனால் விஜய் ஆண்டனி கிறிஸ்டின் என்பதால் கிறிஸ்துவ முறைப்படி தான் பெயர் வைப்பார்கள். ஆனால் அவரது மகளுக்கு ஏன் மீரா என்று பெயர் வைத்தார் என தெரியவில்லை. மேலும் கடந்த ஒரு வருடங்கள் ஆகவே மீரா மன உளைச்சலில் இருந்ததால் அவரது வீட்டில் அருகில் உள்ள சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டு இருக்கிறார்.

Also Read : 7 வயதில் அப்பாவின் மரணம்.. 16 வயதில் தவிக்க விட்ட மகள், நிலைகுலைந்து போன விஜய் ஆண்டனி

இதற்கான மாத்திரை அவரது ரூமில் இருந்திருக்கிறது. அதுவும் இரவு ஒரு மணிக்கு மாத்திரையை போட்டுவிட்டு தண்ணீர் குடித்த பிறகு தான் தூங்க சென்றிருக்கிறார். தற்கொலை என்பது இரண்டு அல்லது மூன்று நிமிடங்களில் வந்து போகும் விஷயம்தான். அதை நாம் கடந்து விட்டால் அதன் பிறகு வெற்றி தான். ஆனால் மீராவால் அதை எதிர்கொள்ள முடியவில்லை என பயில்வான் கூறியிருக்கிறார்.

தற்கொலை செய்யும் அளவிற்கு இந்த வயதில் மீராவுக்கு என்ன மன அழுத்தம் என்பது இறைவனுக்கு மட்டுமே வெளிச்சம் என்று கூறி இருக்கிறார். அதோடு மட்டுமல்லாமல் சமீபத்தில் தான் மிகப்பெரிய விபத்திலிருந்து விஜய் ஆண்டனி மீண்டும் வந்தார். இப்போது அவரது மகள் இழப்பு அவருக்கு மிகப்பெரிய துயரத்தை கொடுத்திருக்கிறது. விஜய் ஆண்டனியின் தந்தையும் தற்கொலை செய்து கொண்ட நிலையில் இப்போது மகளும் இதே முடிவை எடுத்துக் கொண்டிருப்பதால் ஜெனிடிக் பிரச்சனையாக இருக்குமோ என்ற சந்தேகத்தையும் பயில்வான் எழுப்பி இருக்கிறார்.

Also Read : ரவீந்தர், மகாலட்சுமி காதலை அம்பலப்படுத்திய பயில்வான்.. அடுத்தவ புருஷனுக்கு ஆசைப்பட்ட கேவலம்

Trending News