வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

விழிப்புணர்வு என்ற பெயரில் ஓவர் ஆட்டம் போடும் பகாசூரன் மோகன்.. சட்ட சிக்கலில் மாட்ட வைக்க குவியும் கண்டனங்கள்

சர்ச்சைக்குரிய திரைப்படங்களை எடுத்து ரசிகர்களின் கவனத்தை கவரும் பல இயக்குனர்கள் இருக்கின்றனர். அதில் சமீப காலமாக ஒரு இயக்குனர் இயக்கும் திரைப்படங்கள் அனைத்துமே ஏதாவது ஒரு சர்ச்சைகளுக்கு வழிவகுக்கிறது. அந்த வகையில் பிரபல இயக்குனர் செல்வராகவனை வைத்து பகாசூரன் என்ற திரைப்படத்தை இயக்கியிருக்கும் மோகன் ஜி மீண்டும் ஒரு பிரச்சனையில் சிக்கியிருக்கிறார்.

ஏற்கனவே இவருடைய இயக்கத்தில் வெளிவந்த திரௌபதி, ருத்ரதாண்டவம் போன்ற திரைப்படங்கள் சில விமர்சனங்களை சந்தித்தது. அப்போது அவருக்கு ஆதரவாக பலரும் குரல் கொடுத்தனர். இந்நிலையில் தற்போது வெளிவந்துள்ள பகாசூரன் திரைப்படத்தை பார்த்த பலரும் இயக்குனரின் பிற்போக்கு தன்மையை பற்றி வெளிப்படையாகவே விமர்சித்து வருகின்றனர்.

Also read: செல்வராகவனை செருப்பால் அடித்த பிரபலம்.. விடாப்பிடியாக இருந்த இயக்குனர்

அதிலும் விழிப்புணர்வு கொடுக்கிறேன் என்ற பெயரில் அவர் அபத்தமான ஒரு கருத்தை தெரிவித்து இருப்பதாகவும் விமர்சனங்கள் எழுந்து வருகிறது. ஏனென்றால் பகாசூரன் திரைப்படத்தில் செல்போனை பயன்படுத்துவதால் பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்து அவர் கூறியிருக்கிறார். அது மட்டுமல்லாமல் பெண்கள் கவனமாக இருக்க வேண்டும் என்ற கருத்தையும் அவர் ஆணித்தரமாக சொல்லி இருக்கிறார்.

இது சரியான கருத்தாக இருந்தாலும் பாதிப்பை ஏற்படுத்துவர்களுக்கான அழுத்தமான பதிவை அவர் கொடுக்க தவறி இருக்கிறார். இதைத்தான் தற்போது ஆடியன்ஸ் பலரும் காட்டமாக கேள்வி எழுப்பி வருகின்றனர். இது ஒரு புறம் இருக்க இப்போது அவருக்கு சட்டரீதியாகவும் சில சிக்கல்கள் வந்துவிடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஏனென்றால் அவர் தற்போது தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் ஒரு வீடியோவை ஷேர் செய்திருக்கிறார்.

Also read: சமீபத்தில் மாரடைப்பால் இறந்து போன 5 காமெடி நடிகர்கள்.. திரை உலகையே உலுக்கிய விவேக், மயில்சாமியின் மரணம்

அதில் பள்ளியில் படிக்கும் மாணவியும், மாணவரும் மிகவும் நெருக்கமாக இருக்கும் காட்சிகள் இருக்கிறது. அதிலும் அவர்கள் யூனிஃபார்மில் இருப்பதும், அவர்களின் முகமும் தெள்ளத் தெளிவாக தெரிகிறது. இப்படி ஒரு வீடியோவை தான் அவர் பகிர்ந்து இருக்கிறார். இதை பார்த்த பலரும் அவருக்கு எதிராக கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். ஏனென்றால் இது போன்ற வீடியோக்களை யாரும் பகிரக்கூடாது மற்றும் அவர்களின் அடையாளங்களை மற்றவர்களுக்கு காட்டக்கூடாது என்ற ஒரு சட்டம் இருக்கிறது.

ஆனால் அதைப்பற்றி அறியாத இயக்குனர் இப்படி ஒரு வீடியோவை ஷேர் செய்திருப்பது அதிர்ச்சியை கிளப்பி இருக்கிறது. மேலும் இந்த ஒரு அடிப்படை விஷயம் கூட தெரியாத இவர் படம் எடுக்க வந்துவிட்டார் என்ற ரீதியிலும் கருத்துக்கள் கிளம்பியுள்ளது. அந்த வகையில் விழிப்புணர்வு என்ற பெயரில் ஓவராக ஆட்டம் போடும் இவரை சட்டரீதியாக தண்டிக்க வேண்டும் என்ற கண்டன குரல்கள் இப்போது எழுந்துள்ளது.

Also read: ஸ்பைடர் மேனாக மாறிய ஹிப் ஹாப் ஆதி.. ட்ரெண்டாகும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

Trending News