புதன்கிழமை, மார்ச் 12, 2025

இனியாவின் காதலை சுமூகமாக முடித்து வைத்த பாக்கியா.. ஈஸ்வரியின் ஆணவத்திற்கு மருமகள் கொடுத்த பதிலடி

Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், இனியாவிடம் பக்குவமாக எடுத்துப் பேசி படிப்பு தான் வாழ்க்கைக்கு ரொம்ப முக்கியம். அந்த படிப்பை நன்றாக கற்றுக் கொண்டால் மட்டும் தான் வாழ்க்கையில் நாம் ஜெயிக்க முடியும். இதற்கு உதாரணம் என்னை எடுத்துக் கொள், பல வருடங்களாக மக்கு மாதிரி இருந்த நான், ஒரு கட்டத்திற்கு பிறகு தான் வாழ்க்கை என்றால் என்ன என்று புரிந்து கொண்டு அதன்படி ஓடத் தொடங்கி இருக்கிறேன்.

ஆனால் அதற்குள் என்னுடைய காலங்கள் எல்லாம் முடிந்து விட்டது. உனக்கு அப்படி ஒரு நிலைமை வரக்கூடாது என்பதற்காகத்தான் நான் போராடுகிறேன். அதற்கு நீயும் ஒத்துழைத்தால் மட்டும்தான் உன் வாழ்க்கை பிரகாசமாக அமையும் என்று எடுத்துச் சொல்கிறார். உடனே இனியாவும் இனி என்னுடைய படிப்பில் மட்டும் தான் கவனம் செலுத்துவேன். என்னால் உனக்கும் குடும்பத்துக்கும் எந்தவித அவமானமும் வராது என்று சத்தியம் செய்து விடுகிறார்.

இதனை அடுத்து பாக்கியா வழக்கம்போல் ஹோட்டலுக்கு கிளம்புகிறார். ஆனால் ஈஸ்வரி நீ ஒன்னும் ஹோட்டலுக்கும் போக வேண்டாம். வீட்டில் உள்ள வேலையும் உன் மகளையும் மட்டும் பார்த்து ஒழுங்காக கரை சேர்க்கப் பாரு. இல்லையென்றால் இன்னும் நமக்கு அவமானத்தை தான் தேடி கொடுப்பாள் என்று சொல்கிறார். அதற்கு பாக்கியா, நாம் என்னதான் பிள்ளைகளுக்கு நல்ல விஷயங்களை சொல்லிக் கொடுத்தாலும் ஒரு சில நேரங்களில் இந்த மாதிரியான பிரச்சனைகள் வரத்தான் செய்யும்.

ஆனால் அதற்காக துவண்டு போய் வீட்டிலே முடங்கி இருந்தால் என்னால் எதுவும் பண்ண முடியாது. இனியாவிடம் பேச வேண்டிய எல்லாத்தையும் பேசி புரிய வைத்து விட்டேன். அதனால் இனி எந்த பிரச்சனையும் வராது, ஹோட்டலுக்கு கிளம்புகிறேன் என்று ஈஸ்வரியின் ஆணவத்திற்கு சரியான பதிலடி கொடுத்து பாக்யா கிளம்பி விடுகிறார். அடுத்ததாக ஹோட்டலுக்கு போன பாக்கியாவுக்கு செல்வி ஞாபகமாகவே இருந்தது.

உடனே செல்வியை சந்தித்து பேசலாம் என்று பாக்கியா, செல்வி வீட்டிற்கு போய்விடுகிறார். போனதும் செல்வியை சமாதானப்படுத்தி ஆகாஷ் இடம் உன்னுடைய படிப்பில் மட்டும் கவனம் செலுத்து. நீ படித்து முன்னேறினால் தான் உன்னுடைய குடும்பமும் முன்னேறும். அதற்காகத்தான் எந்நேரமும் உன்னுடைய அம்மா பாடுபட்டுக் கொண்டிருக்கிறார். இதை மனதில் வைத்து ஒழுங்காக படிக்கிற வேலையை பாரு என்று சொல்கிறார்.

அதற்கு ஆகாஷ் சரி என்று சொல்லிய நிலையில் பாக்யா சத்தியம் கேட்கிறார். உடனே ஆகாஷ் நான் இனி படிப்பில் மட்டும் கவனம் செலுத்தி கலெக்டர் ஆகுவேன். இனியவை பார்த்து பேசி பழக மாட்டேன் என்று சத்தியம் பண்ணி விடுகிறார். அந்த வகையில் இனியாவின் காதல் பிரச்சினையை சுமூகமாக பாக்கியா பேசி முடித்து வைத்து விட்டார். அத்துடன் செல்வியையும் பழைய மாதிரி வேலைக்கு வா என்று பாக்யா கூப்பிட்டு சமாதானப்படுத்தி விடுகிறார்.

Trending News