வெள்ளிக்கிழமை, ஜனவரி 17, 2025

பிள்ளை இல்லாத வீட்டில் துள்ளி விளையாடும் பாக்கியா கோபி.. மாமி கையில் குழந்தையை கொடுக்க போகும் சக்காளத்தி

Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், கோபியின் அம்மா அடிக்கடி எழிலிடம் உனக்கும் அமிர்தாவுக்கும் ஒரு குழந்தை பிறக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டு வருகிறார். ஆனால் எழில் எங்களுக்கு நிலா பாப்பா மட்டும் போதும் என்று கூறிவிட்டார்.

அதற்கு எழிலின் பாட்டி, எனக்கு அதெல்லாம் தெரியாது என் காதில் வாந்தி எடுக்கிற சத்தம் கேட்க வேண்டும் என்று சொன்னார். அதே மாதிரி இவருடைய ஆசைப்படி பாக்கியா வீட்டில் வாந்தி எடுக்கும் சத்தம் கேட்க ஆரம்பித்து விட்டது. ஆனா என்ன பேரனுக்கு பதிலாக மகன் அப்பாவாக போகிறார்.

ஆரம்பத்தில் தயக்கத்துடன் இருந்த ராதிகா, அம்மா சொன்னதுக்கு பிறகு இந்த குழந்தையை பெற்றெடுக்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டார். ஆனால் வீட்டில் எப்படி சொல்வது என்று கோபி தத்தளித்துக் கொண்டு வருகிறார். இன்னொரு பக்கம் பழனிச்சாமி தினமும் பாக்கியாவை பார்க்க வேண்டும் என்று புது புது காரணத்தை வைத்து பார்த்து பேசுகிறார்.

இனியாவின் லவ் ட்ராக்

பழனிச்சாமி என்ன மனநிலைமையில் இருக்கிறார் என்று கூட தெரியாமல் பாக்கியா அன்புக்கு விலை பேசாதீங்க என்று சொன்னதிலிருந்து மொத்தமாக பழனிச்சாமி காதலில் விழுந்துவிட்டார். அந்த வகையில் பாக்கியாவை பார்த்து தினமும் பேசி எப்படியாவது பாக்கியா மனதில் இடம் பிடித்து விட வேண்டும் என்று நினைக்கிறார்.

இப்படி பிள்ளை இல்லாத வீட்டில் கிழவன் துள்ளி விளையாடுவது போல் கோபி ஒரு பக்கம் ஆட்டம் போட்டு வருகிறார். இன்னொரு பக்கம் பழனிச்சாமி உடன் பாக்யா பேசி கடலை போட்டு வருகிறார். போதாதற்கு இனியா அவருடைய லவ் ட்ராக்கை கொண்டு வருகிறார். கடைசியில் இதெல்லாம் எங்க போய் முடிய போகிறதோ. இதுக்கு பேசாம ஒரு பெரிய பூசணிக்காய் வாங்கி ஒடச்சு மொத்த கதைக்கும் சுபம் போட்டு விடலாம்.

Trending News