Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், பாக்கியா என்னதான் மாமியார் குடும்பத்தை தன் குடும்பமாக பார்த்து ஒவ்வொரு நல்லதையும் செய்தாலும் கோபி பொறுத்த வரை பாக்கியா ஒரு வேலைக்காரி தான். அதனால் தான் தன் அம்மாவை வெளியே கூட்டிட்டு வந்த பாக்யாவிற்கு கொஞ்சம் கூட நன்றி சொல்லாமல் தற்போது அவரையே எதிர்த்து மோதும் அளவிற்கு சமையல் போட்டியில் கலந்து கொள்கிறார்.
அந்த வகையில் கோபி அவருடைய ஹோட்டல் செப் மூலம் சமையல் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். அதே மாதிரி பாக்கியா, மாமியாருடன் சேர்ந்து அதே நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். அங்கே வந்த கோபி, அம்மாவிடம் ஆசிர்வாதம் கேட்கிறார். ஆனால் ஈஸ்வரி என்னுடைய பாக்கியா மட்டும் தான் இந்த போட்டியில் ஜெயித்து வெற்றி பெறுவார் என்று கோபியை நோஸ்கட் பண்ணி விட்டார்.
பெத்த பிள்ளையால் அவமானத்தை சந்திக்கும் பாக்கியா
இதனை தொடர்ந்து இந்த நிகழ்ச்சி பரபரப்பாக போய்க்கொண்டிருக்கும் நேரத்தில் இனியா அவருடைய தோழியின் பிறந்தநாள் என்று அம்மாவிடம் பெர்மிஷன் வாங்கிவிட்டு பிரெண்ட்ஸ் வீட்டிற்கு போய் இருக்கிறார். போன இடத்தில் எல்லோரும் டிஸ்கோ நடக்கும் இடத்திற்கு போகிறார்கள். அங்கே போனதும் நடந்த சின்ன கலவரத்தில் போலீஸ் வந்துவிடுகிறது.
அப்பொழுது இனியாவும் மாட்டிக் கொண்டதால் போலீஸ் அங்கே இருந்த அனைவரையும் ஸ்டேஷனுக்கு கூட்டிட்டு போகிறார்கள். இது தெரியாத பாக்கியா, இனியாவிற்கு ஃபோன் பண்ணிக் கொண்டே இருக்கிறார். இனியா போன் பேச முடியாததால் போலீஸ் ஸ்டேஷனில் இருக்கும்படி அமையப் போகிறது. பிறகு இனியாவை தேடி ஒட்டுமொத்த குடும்பமும் அலையப் போகிறார்கள்.
இந்த டென்ஷனில் பாக்யா சமையல் நிகழ்ச்சியில் கோட்டை விடப் போகிறார். அதாவது ராதிகா சொன்ன மாதிரி உங்க பொண்ணும் கோர்ட்டு போலீஸ் என்று அலையும் பொழுது தான் அந்த வேதனை உங்களுக்கு புரியும் என்று சாபம் விட்டிருந்தார். அப்படி ராதிகா சொன்ன வாய் முகுர்த்தம் தற்போது பலித்து விட்டது. அதன்படி இனியா விஷயத்தில் பாக்கியா மாட்டிக் கொண்டார்.
இதே மாதிரி ஏற்கனவே இனியா 12 ஆம் வகுப்பு படிக்கும் போது இதே பிரச்சினை நடந்தது. அப்பொழுது பாக்கியா கோர்ட் கேஸ் என்று போகவிடாமல் தடுத்து மகளைக் காப்பாற்றி விட்டார். ஆனால் ராதிகாவின் வயிற்றெரிச்சல் படி தற்போது இனியா சிக்கிக்கொண்டார். இதனால் பாக்கியவால் தொடர்ந்து சமையல் நிகழ்ச்சியில் கவனம் செலுத்த முடியாமல் தவிக்கப் போகிறார்.
இந்த கேப்பில் கோபி அசால்ட் ஆக சமையல் நிகழ்ச்சியில் வெற்றி பெற வாய்ப்பு இருக்கிறது. ஆக மொத்தத்தில் என்னதான் ராதிகா தவறாக இருந்தாலும் பிள்ளைகளை வளர்ப்பதில் மயூவை மிஞ்சிக்க முடியாது. ஆனால் பாக்யா ஒட்டுமொத்த நல்லவரின் உருவமாக இருந்தாலும் இனியவை நல்லவிதமாக வளர்ப்பதில் கோட்டை விட்டுவிட்டார்.
பாக்கியலட்சுமி சீரியலில் நடந்த சம்பவங்கள்
- தொப்புள் கொடி உறவை தூக்கி எறிந்த ஈஸ்வரி
- ஈஸ்வரிக்கு ஏற்பட்ட அவமானத்தால் கோபிக்கு கிடைத்த தண்டனை
- ஈஸ்வரியை கதறவிட்ட ராதிகாவின் அம்மாவுக்கு கோபி கொடுக்கும் பதிலடி