திங்கட்கிழமை, மார்ச் 10, 2025

கோபியை வீட்டை விட்டு வெளியே அனுப்பும் பாக்கியா.. செல்வி மகனை அடித்து துன்புறுத்திய செழியன், தப்பித்த ராதிகா

Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், இனியாவின் காதல் விவகாரம் கோபிக்கு தெரிந்ததால் வீட்டில் இருக்கும் எல்லோருக்கும் தெரியப்படுத்திவிட்டார். அதிலும் இனிய காதலித்தது கூட பெரிய விஷயமாக யாருக்கும் இல்லை, செல்வி மகனை காதலித்து தான் பெரிய குற்றமாக அனைவரும் பார்க்கப்பட்டு வருகிறார்கள்.

அதில் செழியன் ஈஸ்வரி மற்றும் கோபி இவர்கள் 3 பேருமே இனியா, ஆகாஷை காதலித்ததற்கு தான் வானத்துக்கும் பூமிக்கும் குதிக்கிறார்கள். அந்த வகையில் செழியன் கோபி இரண்டு பேரும் சேர்ந்து செல்வி வீட்டுக்கு போய் விடுகிறார்கள். அங்கே ஆகாஷை கண்ணுமுன்னு தெரியாமல் அடித்து செழியன் துன்புறுத்துகிறார்.

உனக்கு காதலிக்க எங்க வீட்டு பொண்ணு தான் கிடைத்திருக்கிறதா? என்ன தைரியம் இருந்தால் இனியாவை காதலித்திருப்பாய், உனக்கு அப்படி என்ன தகுதி இருக்கு என்று கேட்டு செழியன் கோபி அடித்து விடுகிறார்கள். ஆனால் இந்த விஷயம் பாக்கியாவுக்கு தெரிய வந்ததும் வீட்டிற்கு நேராக வந்து செழியன் இடம் உனக்கு செல்வி மகனை அடிப்பதற்கு என்ன உரிமை இருக்கிறது.

யார் அந்த உரிமையை கொடுத்தா என்று கேள்வி கேட்கிறார். அதற்கு செழியன், நான் செஞ்சதில் என்ன தப்பு, அவன் செஞ்ச காரியத்திற்கு நான் அவனை வெட்டியே போட்டு இருப்பேன் என்று கொந்தளிக்கிறார். உடனே பாக்கியா, செழியன் கன்னத்தில் பளார் என்று அறைந்து விடுகிறார். இதை பார்த்த ஜெனிக்கும் நிச்சயம் கோபம் வந்திருக்கும். பாக்யாவிடம் ஜெனி சண்டை போட்டாலும் போடுவார்.

அடுத்ததாக கோபி, செழியனை பாக்கிய அடித்ததற்காக கோபமாக பேசுகிறார். ஒன்னும் இல்லாத பையன் நம்முடைய பொண்ணு கிட்ட பேசுவான் பார்ப்பான் அதை பார்த்துட்டு சும்மாவா இருக்க முடியும் என்று கேட்கிறார். உடனே பாக்கியா இதுவரை நம்முடைய பசங்களுக்காக தான் நான் உங்களை சகித்துக் கொண்டு இருந்தேன்.

ஆனால் இனியும் அப்படி இருக்க தேவையே இல்லை என்று சொல்லி வீட்டை விட்டு கோபியை வெளியே போக சொல்லி விட்டார். ஆனால் கோபியை மட்டும் இல்ல கோபியுடன் சேர்ந்து ஈஸ்வரியையும் வெளியே அனுப்பினால் தான் பாக்கியா குடும்பம் சந்தோஷமாக இருக்கும். ஒரு வழியாக ஈஸ்வரி மற்றும் கோப்பியிடமிருந்து ராதிகா தப்பித்துவிட்டார். இதே மாதிரி பாக்யாவும் தப்பித்தால் மட்டும்தான் சந்தோஷமாக இருக்க முடியும்.

Trending News