வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

முன்னாள் புருஷன் மீது கரிசனம் காட்டும் பாக்கியா.. தோற்கப் போகும் கோபி, அவமானப்பட்டு நிற்கும் ராதிகா

Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், பட பூஜைக்கு அம்மாவை வரவிடாமல் தடுத்து விட்டோம் என்ற குற்ற உணர்ச்சியில் எழில், பாக்யாவை நேரடியாக பார்த்து பேசலாம் என்று வீட்டிற்கு வருகிறார். அப்போது ஜெனி, அத்தை வீட்டுக்கு இன்னும் வரவில்லை. ஹோட்டல் வேலையில் பிஸியாக இருப்பதால் அங்கேயே இருந்து எல்லா வேலையும் பார்க்கிறார் என்று சொல்கிறார்.

இதை கேட்டதும் இனியா மற்றும் செழியன், அம்மா ரொம்ப ஓவராக தான் போறாங்க. எழிலின் நீண்ட நாள் கனவை நினைவாக்கும் அந்த தருணத்தில் கூட அம்மாவால் வர முடியவில்லை என்றால் எங்களை விட அம்மாக்கு அந்த ஹோட்டல் தான் ரொம்ப முக்கியமாக போச்சு என்று வாய்க்கு வந்தபடி செழியன் பேசுகிறார். ஆனால் இது எல்லாம் கேட்டு எழில் நடந்த விஷயத்தை எதுவும் சொல்லாமல் அம்மாவை நான் ஹோட்டலில் பார்த்து பேசிக்கொள்கிறேன் என்று போய்விடுகிறார்.

அட்லீஸ்ட் நடந்த உண்மையை எழில், வீட்டில் இருப்பவர்களிடம் சொல்லி இருந்தால் கூட இனியா மற்றும் செழியனுக்கு கோபியின் வக்கிர புத்தி தெரிந்திருக்க வாய்ப்பு இருக்கிறது. பாக்யாவை பற்றி கோபமாக பேசும் பொழுது கூட எழில் எதுவும் சொல்லாமல் இருப்பது கடுப்பாக இருக்கிறது. அடுத்ததாக கோபி, பாக்கியா ஹோட்டலில் பிரச்சனை வந்துவிடும். அதை வீட்டில் இருந்தபடியே டிவி போட்டு ரசித்து பார்க்கலாம் என்று காத்துக் கொண்டிருக்கிறார்.

அப்படி காத்துக் கொண்டிருக்கும் பொழுது பாக்கியா வீட்டிற்கு வருகிறார். பாக்கியாவை எதிர்பார்க்காத கோபி அப்படியே அதிர்ச்சியாகி நிற்கிறார். பிறகு ராதிகா என்ன பிரச்சனை என்று கேட்கும் பொழுது என்னுடைய ஹோட்டலில் எனக்கு பிரச்சனை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக மக்களின் உயிரில் உங்க வீட்டுக்காரர் விளையாடி இருக்கிறார்.

என்னை பழிவாங்க வேண்டும் என்றால் எந்த எல்லைக்கும் போவார் என்பது கொஞ்சம் கூட நினைச்சு பார்க்கவில்லை என்று மறைமுகமாக சொல்கிறார். அப்பொழுது ராதிகா என்ன ஆச்சு என்று கேட்கும் பொழுது நான் செய்த பிரியாணி சாப்பாட்டில் கெட்டுப்போன கறியை போட்டு எனக்கு பிரச்சனை ஏற்படுத்தியது வேறு யாருமில்லை மிஸ்டர் கோபிநாத் தான் என்று சொல்கிறார்.

அது மட்டும் இல்லாமல் இப்பொழுது நான் எடுத்திருக்கும் ஆர்டரில் கலப்படம் செய்து என் ஹோட்டலை நிரந்தரமாக மூட வேண்டும் என்பதற்காக பிளான் பண்ணி இருக்கிறார். இப்படி கீழ்த்தனமான வேலையை பார்க்கும் கோபிநாத்துக்கு நான் சொல்ல வருவது என்னவென்றால் இனிதான் என்னுடைய ஆட்டம் ஆரம்பமாகப் போகிறது. இத்தனை நாள் நான் உண்டு என் வேலை உண்டு என்று ஒதுங்கி இருந்தேன்.

எப்பொழுது என்னை சீண்டி பார்க்க வேண்டும் என்று என்னுடைய ஹோட்டலை வைத்து பகடைக்காயாக காய் நகரத்தினாரோ, அப்பொழுதே முடிவு பண்ணிட்டேன் என்னுடைய லெவல் இனி அடுத்தடுத்து உயரத்துக்கு போய்க் கொண்டே இருக்க போகிறது. அந்த வகையில் இனி கோபியின் நிலைமை படு மோசமாக இருக்கப் போகிறது என்று சவால் விடும் அளவிற்கு வீர வசனம் பேசி விட்டார்.

ஆனால் இதற்கு எதுவும் பதில் சொல்ல முடியாமல் ராதிகா அவமானத்தில் தலை குனிந்து நிற்கிறார். இதையெல்லாம் விட பாக்யா என்ன தான் பேசி இருந்தாலும் கோபி செய்த தண்டனைக்கு பதிலாக போலீசில் புகார் கொடுத்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். அதை விட்டுவிட்டு இவ்வளவு பிரச்சனைக்கு காரணமாக இருக்கும் கோபி மீது கரிசனம் காட்டும் விதமாக வாய் சவடால் விடுவது இன்னும் இந்த கோபி அட்டகாசம் பண்ணுவதற்கு வாய்ப்பு கொடுத்த மாதிரி இருக்கிறது.

Trending News