வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

ராஜி பற்றிய உண்மையை கோமதியிடம் கூறிய பாக்கியா.. கதிருக்கு திருமணத்தை பண்ணி வைக்கும் மீனா

Bakkiya tells the truth about Raji to Gomathi: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 கிட்டத்தட்ட மூன்று வாரங்களாக சங்கமமாக வருகிறது. அந்த வகையில் திருச்செந்தூரு கோயிலில் வைத்து திருமணத்தை பண்ணலாம் என்று ராஜ்ஜியை கண்ணன் ஏமாற்றி கூட்டிட்டு வருகிறான். ஆனால் வந்த பிறகு தான் ராஜிக்கு கண்ணன் ரொம்பவே மோசமானவன் என்ற விஷயம் தெரிகிறது.

அத்துடன் திருட்டுத்தனமாக நகையும் பணத்தையும் எடுத்துட்டு வந்திருக்கிறான் என்று தெரிந்ததும் அதை வாங்க முயற்சி பண்ணுகிறார். ஆனால் கண்ணன் நான் உன்னை காதலிக்கவே இல்லை உன் அழகுக்கும் பணத்துக்கு ஆசைப்பட்டு தான் உன் பின்னால் அலைந்தேன் என்கிற மாதிரி பேசிவிட்டு நகையை எடுத்துக் கொண்டு ஓடி விடுகிறான்.

இதையெல்லாம் பார்த்த பாக்யா, ராஜிக்கு சப்போர்ட்டாக பேசி துணையாக இருக்கிறார். அத்துடன் பாக்கியாவும் சமையல் வேலைக்காக வந்த விஷயத்தை முடித்துவிட்டு ஊருக்கு போகலாம் என்று இருக்கிறார். அதே மாதிரி கோவிலுக்கு வந்த கோமதி, மீனா மற்றும் கதிர் ஊரில கல்யாணம் நின்னு போய்விட்டது என்ற விஷயம் தெரிந்ததும் திரும்பி வீட்டிற்கு போகலாம் என்று கிளம்பி விட்டார்கள்.

Also read: குணசேகரனின் வண்டவாளத்தை தண்டவாளம் ஏற்றிய ஆதிரை.. பாசத்தையும் முரட்டுத்தனத்தையும் ஓவராக கொட்டும் கதிர்

அப்பொழுது வெளியே வந்து பாக்யா மற்றும் கோமதி சந்தித்து பேசும் பொழுது, ஊரில என்னுடைய அண்ணன் பொண்ணு வீட்டை விட்டு ஓடி வந்துட்டா என்கிற உண்மையை சொல்கிறார். அப்பொழுது அந்த பொண்ணு போட்டோ இருந்தா காட்டுங்கள் என்று பாக்கியா கேட்கிறார். அப்பொழுது ஃபோன் மூலமாக காட்டிய கதிர், பாக்யா இந்த பொண்ணு என் கூட தான் இருக்கிறாய் என்று கோமதியை கூட்டிட்டு போகிறார்.

உடனே கோமதி, ராஜியை ஆடித்து நான் தான் எங்க அண்ணனுக்கு மிகப்பெரிய ஒரு களங்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தேன். அதே மாதிரி நீயும் இப்படி ஒரு தப்பை பண்ணி இருக்கிறார் என்று திட்டுகிறார். உடனே ராஜி கோவத்தில் தற்கொலை செய்ய முயற்சி பண்ணுகிறார். அப்பொழுது அனைவரும் காப்பாற்றி விடுகிறார்கள். ஆனால் ராஜியை வீட்டிற்கு கூட்டிட்டு போனால் ஊரில் எல்லாரும் தவறாக பேசுவார்கள் என்பதால் மீனா ஒரு ஐடியா கொடுக்கிறார்.

அதாவது ராஜிக்கும் கதிருக்கும் திருமணத்தை பண்ணி வைக்கலாம். அதன்பிறகு கணவன் மனைவியாக ஊருக்கு வந்தால் யாரும் எதுவும் பேச மாட்டார்கள் என்று சொல்கிறார். அதற்கு ஏற்ற மாதிரி இவர்களுடைய கல்யாணம் திருச்செந்தூர் கோவிலில் வைத்து நடைபெறுகிறது. அடுத்து வீட்டிற்கு வந்ததற்கு பிறகு தான் மாமான் மச்சான் சண்டை இன்னும் பல மடங்கு பெருசாக வெடிக்க போகிறது.

Also read: நினைச்சதை சாதித்துக் காட்டிய மருமகள்கள்.. ஆதிரை திருமணத்திற்கு ஏற்பாடு பண்ணும் சாருபாலா

Trending News