திங்கட்கிழமை, ஜனவரி 27, 2025

சைக்கோ பற்றிய உண்மையை போட்டு உடைக்கும் பாக்கியா.. ஈசியாக எடுத்துக் கொள்ளும் வாரிசு

Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், பாக்கியா நடத்திய பொருட்காட்சிக்கு அமிர்தாவின் முன்னாள் கணவர் கணேஷ் நேரடியாக வந்து இன்னும் இரண்டு நாட்கள் தான் இருக்கிறது. அதற்குள் நீங்கள் உங்கள் குடும்பத்திடம் உண்மையை சொல்லி எனக்கு சாதகமான ஒரு பதிலை சொல்ல வேண்டும் என்று பிளாக்மெயில் பண்ணிட்டு போயிருக்கிறார்.

இதனால் எப்படியாவது குடும்பத்தில் இருப்பவர்களிடம் அமிர்தாவின் முன்னாள் கணவரை பற்றி சொல்லி விட வேண்டும் என்று ஒவ்வொரு இடத்திலும் முயற்சி செய்து வருகிறார். அந்த வகையில் பாக்யாவின் நண்பராக இருக்கும் பழனிச்சாமிடம் போன் போட்டு நடந்த விஷயத்தை கூறி ஆலோசனை கேட்கிறார். அதற்கு அவர் நீங்கள் குடும்பத்திடம் சொன்னால் மட்டுமே ஒரு தீர்வு கிடைக்கும் என்று சொல்கிறார்.

அதற்கு முன் இதைப் பற்றி எழிலிடம் பேசுங்கள் என்று பாக்யாவிற்கு ஐடியா கொடுக்கிறார். அதன்படி பாக்கியாவும் எழிலை உட்கார வைத்து நடந்த விஷயத்தை ஒரு கதையாக எழிலிடம் கூறுகிறார். அதாவது தெரிஞ்ச ஒரு குடும்பத்தில் இந்த மாதிரி விஷயம் நடந்திருக்கிறது என்று சொல்லி எழிலின் ரியாக்ஷன் என்ன என்பதை தெரிஞ்சுக்க விரும்புகிறார்.

Also read: எல்லா அப்பன் செஞ்ச பாவம் மகனுக்கு தானே வரும்.. உச்சகட்ட பரபரப்பில் அதிரடி காட்டும் பாக்கியலட்சுமி

அதற்கு ஏற்ற மாதிரி எழில், இதெல்லாம் ஒரு கொடுமையான விஷயம் யாருக்கும் இந்த மாதிரி நடந்து விடக்கூடாது என்று சொல்லிட்டு பாக்யாவிற்கு ஆறுதலாக இதெல்லாம் பற்றி யோசிக்காத அம்மா ஈசியாக எடுத்துக்கோ என்று சமாதானப்படுத்துகிறார். இதனைத் தொடர்ந்து பாக்கியா குடும்பத்தில் இருப்பவர்களிடம் சொல்ல வேண்டுமென்று கோபி மற்றும் மாமியார் இருக்கும்பொழுது சொல்ல வருகிறார்.

அப்பொழுது ஒவ்வொரு தடங்கலாக வரும் நிலையில் எழில் திடீரென்று உள்ளே புகுந்து அம்மா உனக்கு ஒரு ஆப்பர்சூனிட்டி தயாராக இருக்கிறது. அதனால் அது சம்பந்தமாக நாம் பேச வேண்டும் என்று பாக்யாவை கூப்பிடுகிறார். இதனால் அந்த நேரத்தில் பாக்யாவால் எதுவும் சொல்ல முடியாமல் எழிலுடன் போய்விடுகிறார்.

அங்கே போனதும் ஒரு ரெஸ்டாரன்ட் வைப்பதற்கான வாய்ப்பு அவரைத் தேடி வந்திருக்கிறது. இது சம்பந்தமாக பழனிச்சாமி மேற்கொண்டு அனைத்து விஷயங்களையும் அந்த நபரிடம் பேசுகிறார். அந்த வகையில் கண்டிப்பாக பாக்கியா அடுத்த கட்ட முன்னேற்றமாக ஒரு ஹோட்டல் வைத்து அதில் வெற்றி பெறுவதற்கு உறுதுணையாக அமையப் போகிறது.

Also read: அராஜகத்துக்கு மேல் அட்டூழியம் பண்ணும் குணசேகரன்.. அப்பாவாக அடைக்கலம் கொடுக்கும் ஜீவானந்தம்

Trending News