வியாழக்கிழமை, ஜனவரி 2, 2025

எழில் கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி போன பாக்கியா.. அம்மாவை பெருமை படுத்தி கோபி முகத்தில் கரிய பூசிய மகன்

Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், கோபியை பொறுத்தவரை பசங்க மீது பாசம் இருக்கோ இல்லையோ, பாக்கியாவை பழிவாங்க வேண்டும். யாரு ஆதரவு இல்லாமல் தனி மரமாக நிற்க வேண்டும் என்பதுதான் ஆசை. அதனால் பசங்களை கொஞ்சம் கொஞ்சமாக தன் பக்கம் இழுக்க வேண்டும் என்பதற்காக இனியா மற்றும் செழியன் இடம் பாசத்தை காட்டிட்டு வருகிறார்.

அடுத்ததாக எழிலுக்கும் ஒரு வாய்ப்பு வாங்கிக் கொடுத்து அதில் பாக்கியா கலந்து கொள்ள முடியாத அளவிற்கு வேதனைப்பட வேண்டும் என்பதற்காக தயாரிப்பாளர் மூலம் செக் வைத்து விட்டார். இதனால் எழில் தர்ம சங்கடத்தில் இருக்கும் பொழுது பாக்கியா பூஜைக்காக வந்து விடுகிறார். ஆனால் எழில், நீங்க ஆசைப்பட்ட மாதிரி நான் படம் எடுக்க தயாராகி விட்டேன்.

தற்போது பூஜைக்கு எல்லாம் தயாராகி விட்டது. ஆனால் நீங்கள் கலந்து கொள்ள கூடாது என்று சொல்லி பாக்யாவை கஷ்டப்படுத்தி அனுப்பி விட்டார். இதனை பார்த்த அமிர்தா. ஏன் எதற்கு என்று கேள்வி கேட்கிறார். நான் போய் அத்தையை கூட்டிட்டு வருகிறேன் என்று கிளம்பும்போது எழில் வேண்டாம் என்று தடுத்து பூஜைக்கு கூட்டிட்டு போய் விடுகிறார்.

உடனே அங்கே செழியன் மற்றும் இனியா, அம்மா எங்கே என்று கேட்கிறார்கள். அதற்கு எழில் அவங்க வரமாட்டாங்க என்று சொல்லி படத்தின் டைட்டில் காட்டுவதற்கு தயாராகி விட்டார். இதற்கு இடையில் கோபி, பாக்கியா உன் மகனின் வெற்றியை உன்னால் பார்க்க முடியவில்லை இதுதான் நான் உனக்கு கொடுக்கும் தண்டனை என்று வன்மத்தை கொட்டும் அளவிற்கு சிரித்துக்கொண்டார்.

ஆனால் நான் இருக்கும் வரை என் அம்மாவுக்கு எந்தவித கஷ்டத்தையும் கொடுக்க மாட்டேன் என்பதற்கு ஏற்ப எழில் தரமான சம்பவத்தை செய்து விட்டார். அதாவது டைட்டிலை ஓபன் பண்ணும் பொழுது கோபி அதிர்ச்சியாகிவிட்டார். அதாவது டைட்டிலின் பெயர் பாக்கியலட்சுமி என்று வைத்து அம்மாவை உயர்த்தி பேசும் அளவிற்கு எழில் பெருமை படுத்தி விட்டார்.

இதனை கொஞ்சம் கூட எதிர்பார்க்காத கோபி மொத்தமாக அவமானத்தில் குறுகி போய்விட்டார். ஆனால் ராதிகா, கோபிக்கு சரியான பதிலடி என்ற சொல்வதற்கு ஏற்ப சந்தோஷத்தில் தெனாவட்டாக கைத்தட்டி எழில் எடுக்கப் போகும் படத்திற்கு வாழ்த்துக்கள் சொல்கிறார். எழில் உள்ளே இருந்து பேச பேச வெளியே அழுது கொண்டு இருக்கும் பாக்கியா சந்தோசப்பட்டு ஆனந்த கண்ணீர் வடிக்கிறார்.

அத்துடன் எழில் பேசி முடித்தவுடன் என் வெற்றிக்கு முழுமையான காரணம் என்னுடைய அம்மா தான். பொதுவாக பசங்க படித்து முடித்தவுடன் நல்ல வேலையில் சேர்ந்து கை நிறைய சம்பாதிக்க வேண்டும் என்று தான் பெற்றோர்கள் ஆசைப்படுவார்கள். ஆனால் என்னுடைய அம்மா என் கனவை நிறைவேற்றும் விதமாக எனக்கு சப்போர்ட் பண்ணினார்கள்.

அப்படிப்பட்ட என் அம்மா இப்பொழுது இங்கே வரவேண்டும் என்று சொல்லி அம்மா என்று கத்தி கூப்பிடுகிறார். அந்த வகையில் எழில் கூப்பிட்ட குரலுக்கு பாக்கிய நிச்சயம் பட பூஜையில் கலந்து கொண்டு கோபி மூஞ்சில் கரியை பூசுவார்.

Trending News