வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

மாமனாரை அப்பாவாக நினைத்து காரியம் செய்த பாக்கியா.. செய்த பாவத்துக்கு பரிசாக கோபி அனுபவிக்கும் வேதனை

Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், கதையின் நாயகனாகவும் பாக்கியாவிற்கு சப்போர்ட் ஆகவும் இருந்த தாத்தாவின் கதை முடிந்து விட்டது. ஆனாலும் ஒரு துக்க காட்சியை ஒரு வாரமாக காட்டி வருவதை எல்லாம் பார்க்கும் பொழுது பார்ப்பவர்கள் கண்ணில் இருந்து கண்ணீரை வர வைக்கிறது. இதுதான் சொல்வார்கள் உயிரை கொடுத்து நடிப்பது என்று அதைத்தான் ராமமூர்த்தி சீரியலில் செய்து காட்டியிருக்கிறார்.

தன் கணவர் ஆசைப்பட்ட மாதிரி எந்த காரியமும் கோபி செய்யக் கூடாது என்பதில் ஈஸ்வரி தெளிவாக முடிவு எடுத்து விட்டார். அந்த வகையில் பாக்கியா தான் ஒவ்வொரு விஷயங்களையும் முன்னாடி நின்று செய்கிறார். இதில் இவர்களுடைய நடிப்பை பார்க்கும் பொழுது நிஜத்திலேயே கண்ணீர் வரவைத்து விட்டது. அந்த அளவிற்கு ஒவ்வொருவருடைய அழுகையும் நடிப்பும் எதார்த்தமாக இருக்கிறது.

கோபி செய்த பாவத்திற்கு கிடைத்த தண்டனையாக அனுபவிக்கும் வேதனை

ஆனாலும் கோபி எதுவுமே பண்ண முடியாமல் வேடிக்கை மட்டும் பார்ப்பது கொஞ்சம் பாவமாகவும் இருக்கிறது. பிறகு பாக்யா செய்ய வேண்டிய அனைத்து காரியங்களையும் செய்து இறுதி சடங்குகளை செய்வதற்கு தயாராகி விட்டார். கூடவே எழில் நின்னு பாக்யாவிற்கு சப்போர்ட் செய்து வருகிறார். அந்த வகையில் கடைசி செய்ய வேண்டிய விஷயத்தையும் பாக்கியா செய்து என்னுடைய அப்பாவை என்று அழுது கூப்பிடும் பொழுது உண்மையிலேயே நடிப்பு மெய்சிலிர்க்க வைத்து விட்டது.

இதை தான் டைரக்டர் எதிர்பார்க்கிறார் என்பதற்காக முடியும் தருவாயில் இந்த அளவுக்கு மிகப்பெரிய சென்டிமென்ட் காட்சியை வைத்து இதுவரை வாங்கிட்டு வந்த நெகட்டிவ் விமர்சனங்களை தூள் தூளாக்கி இல்லாமல் ஆகிவிட்டார். ஆனாலும் இந்த மாதிரி விஷயத்துக்கு தாத்தா முழு சம்மதத்தையும் கொடுத்தது மிகப்பெரிய வேதனையாகவும் இருக்கிறது.

கடைசியில் மாமனாருக்கு ஒரு மகளாக இருந்து அப்பாக்கு செய்வது போல் அனைத்தையும் பாக்யா செய்துவிட்டார். ஆனாலும் மாமனாரின் துக்கத்தை தாங்க முடியாத பாக்கிய அழுது புலம்பி தவித்து வருகிறார். இதையெல்லாம் தூரத்திலிருந்து பார்க்கும் கோபி அப்பா நான் செய்த தவறுகளை எல்லாம் மன்னித்து விடுங்கள். ஆனால் கடைசிவரை உங்களுக்கு செய்ய வேண்டிய எதையும் செய்ய விடாமல் போய்விட்டதே என்று புலம்பி அழுகிறார்.

கூடவே நின்னு ராதிகா, கோபிக்கு ஆறுதல் சொல்லி சமாதானப்படுத்துகிறார். ஆனாலும் இதுவரை செய்த பாவத்திற்கு கோபிக்கு கிடைத்த பரிசாக தற்போது மிகப்பெரிய வேதனையை அனுபவித்து வருகிறார். அவள் கண்ணு முன்னாலே இந்த மாதிரி விஷயங்களை பார்க்கும் பொழுது ரொம்பவே வேதனைப்படுத்தும் அளவிற்கு கொடுமையாக இருப்பது போல் உணர்கிறார். ஆனாலும் என்னைக்கும் செய்த தவறுக்கு ஒரு தண்டனை உண்டு என்பது கோபிக்கு இந்த ஒரு தருணத்தில் புரிந்து இருக்கும்.

பாக்கியலட்சுமி சீரியலில் நடந்த முந்தைய சம்பவங்கள்

Trending News