வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

ராதிகாவின் அம்மா சீண்டியதால் கொந்தளித்துப் போன பாக்கியா.. கோபியுடன் சேர்ந்து போட்ட கூட்டணி

Bhakkiyalakhsmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், கோபி போட்ட பிளான் தற்போது ஒர்க் அவுட் ஆகி வருகிறது என்பதற்கு ஏற்ப பாக்கியாவிற்கு எதிராக கொஞ்சம் கொஞ்சமாக இனியா மற்றும் செழியன் மாறிக்கொண்டே வருகிறார்கள். அந்த வகையில் கோபிக்கு சப்போர்ட்டாக ஈஸ்வரி மற்றும் பாக்யாவிடம் எதிர்த்து பேசி சண்டை போட ஆரம்பித்து விட்டார்கள்.

இதனால் நொந்து போன ஈஸ்வரி, தன் கணவர் இறந்து போனதால் யாரும் தன்னை மதிக்க மாட்டார்கள் என்ற கவலையில் முடங்க ஆரம்பித்து விடுகிறார். ஆனால் எப்படியாவது மாமியாரை கொஞ்சம் கொஞ்சமாக தேற்றி வர வேண்டும் என்பதற்காக இனியாவை காலேஜில் கூட்டிட்டு போய்விட்டு திருப்பி கூட்டிட்டு வரும் பொறுப்பை கொடுத்திருக்கிறார்.

பாக்கியலட்சுமி சீரியலில் நடந்த சம்பவங்கள்

அதன்படி ஈஸ்வரி, இனியாவை ஆட்டோவில் காலேஜுக்கு கூட்டிட்டு போகிறார். அப்பொழுது அங்கே வந்த ராதிகாவின் அம்மா கமலா, ஈஸ்வரியை அவமானப்படுத்தும் விதமாகவும் தாத்தா இறந்த வீட்டில் கோபி பட்ட அசிங்கத்திற்கு பழித்திருக்கும் விதமாக மொத்த வன்மத்தையும் கொட்டி தீர்க்கிறார்.

அதாவது கணவர் இறந்து கொஞ்ச நாள் கூட ஆகல, அதுக்குள் பொட்டு வைத்து இப்படி இஷ்டத்துக்கு ஊர் சுத்த ஆரம்பித்து விட்டியா என்று வாய்க்கு வந்தபடி ஈஸ்வரியை தாக்கி பேசுகிறார். இதற்கு எதுவும் பதில் சொல்ல முடியாத ஈஸ்வரி வீட்டிற்கு வந்து பாக்யாவிடம் என்னை தனியாக விட்டு விடுங்கள். உன் பேச்சை கேட்டு நான் இந்த பொட்டு வச்சதும் போதும்.

அவமானப்பட்டதும் போதும் என்று சொல்லி பொட்டை எடுத்துவிட்டு ரூமுக்குள் போய்விடுகிறார். உடனே பாக்கியா, அத்தை இப்படி பேசுவதற்கு காரணம் என்ன, யார் அத்தையை கஷ்டப்படுத்தி பேசினார் என்று இனியாவிடம் கேட்கிறார். அதற்கு இனியா ராதிகாவின் அம்மா தான் பாட்டியை பார்த்து இந்த மாதிரி பேசினார்கள் என்று சொல்லி விடுகிறார்.

உடனே பாக்கியா, ஈஸ்வரியை அவமானப்படுத்தி பேசிய ராதிகாவின் அம்மாவை பார்த்து கோபப்படாமல் அங்கே வந்த ராதிகாவிடம் கொந்தளிக்கும் விதமாக கோபத்தை கொட்டி தீர்க்கிறார். உங்க அம்மாவை சும்மா இருக்க சொல்லுங்க என் அத்தை விஷயத்தில் தலையிடக்கூடாது. இனியும் எங்கள் அத்தையை பத்தி ஏதாவது பேசினால் தான் நான் சும்மா விடமாட்டேன் என்று ராதிகாவை பார்த்து கோபமாக பேசுகிறார்.

என்ன விஷயமே என்று புரியாத ராதிகா திருத்திருவென்று முழித்துக் கொண்டிருக்கிறார். ஆனால் ராதிகாவின் அம்மா சீண்டியதால் பாக்யா ரொம்ப கோவப்பட்டதால் ராதிகாவிற்கு மிகப்பெரிய அவமானமாக போகப் போகிறது. இதனால் கோபி சொன்னபடி பாக்கியாவை பழிவாங்க கூட்டணி போடவும் ராதிகா துணிந்து விடுவார். ஆக மொத்தத்தில் தாத்தா இல்லாததால் பாக்கியா மற்றும் குடும்பம் கொஞ்சம் கொஞ்சமாக துன்பத்தை அனுபவித்து வருகிறார்கள்.

பாக்கியலட்சுமி சீரியலில் நடந்த சம்பவங்கள்

Trending News