செவ்வாய்க்கிழமை, ஜனவரி 14, 2025

ரெண்டு பொண்டாட்டியை சமாளிக்க முடியாமல்.. பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலகும் முக்கிய பிரபலம்

விஜய் டிவியில் அனைவரையும் விரும்பி பார்க்க வைக்கிற ஒரே சீரியல் என்றால் அது பாக்கியலட்சுமி சீரியல் தான். இந்தத் தொடர் பல இல்லத்தரசிகளின் வாழ்க்கையை ஒன்றோடு ஒன்றாக ஒட்டி அமைவதாலே இந்த நாடகத்திற்கு அதிகளவில் வரவேற்பு இருக்கிறது. அத்துடன் ஒரு பெண் தனியாக குடும்பத்தின் பாரத்தை சுமந்து அதை வழிநடத்தும் விதமாக அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

இதில் பாக்கியா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் இவரை மிஞ்சும் அளவிற்கு நடிப்பை வெளுத்து வாங்கிக் கொண்டிருக்கும் கோபி கேரக்டர் அனைவராலும் ரசித்துப் பார்க்கக் கூடியதாக இருக்கிறது. இதில் இவர் கொடுக்கிற ஒவ்வொரு ரியாக்ஷனும் எதார்த்தமாக இருக்கும். இவர் என்னதான் நெகடிவ் கேரக்டரில் நடித்தாலும் இவருக்காக தான் நாடகமே நாங்கள் பார்க்கிறோம் என்று சொல்லும் அளவிற்கு ரசிகர்களை கவர்ந்திருக்கிறார்.

Also read: சீரியலில் மட்டுமல்ல நிஜ வாழ்க்கையிலும் 2வது திருமணம்.. பாக்கியலட்சுமி பிரபலம் செய்த மானங்கெட்ட விவாகரத்து

அதிலும் பாக்கியவுடன் இருந்தால் நிம்மதி இருக்காது என்று ராதிகாவை தேடிப்போய் கல்யாணம் செய்துகொண்டு ஒவ்வொரு நாளும் சித்திரவதை அனுபவித்து வருகிறார். இதனால் தினமும் குடித்துவிட்டு இவர் பண்ற அலப்பறைக்கு அளவே கிடையாது. இப்படி ஒரு கதாபாத்திரத்தையும் நம்மால் ரசிக்க முடியும் என்றால் அது கோபியுடன் நடிப்புக்காக தான் இருக்கும்.

அப்படிப்பட்ட இவர் இந்த சீரியலில் இருந்து விலகப் போகிறார் என்று தகவல் வெளியாகி உள்ளது. இவர் ஏற்கனவே சமீபத்தில் ஒரு சில வீடியோக்களை வெளியிட்டு இனிமேல் என்னுடைய கேரக்டர் அந்த அளவுக்கு பெருசாக இருக்காது. அத்துடன் இனி மேலும் இந்த சீரியலை என்னால் தொடர முடியுமா என்று எனக்குத் தெரியவில்லை. ஆனாலும் இதுவரை எனக்கு கொடுத்த ஆதரவுக்கு மிக்க நன்றி என்று ஒரு சில வீடியோக்களில் பேசி இருந்தார்.

Also read: சக்காளத்தி சண்டையை தொடங்கி வைத்த ராதிகா.. உருள போகும் கோபியின் தலை

ஆனால் அதற்கு காரணம் ரஞ்சித் வந்ததால்தான் இவர் இப்படி பொறாமையில் பேசுகிறார். மற்றப்படி இவர் சீரியலை விட்டு விலக மாட்டார் என்று நினைத்திருந்த ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சியை கொடுக்குமாறு தற்போது விலக உள்ளார். கண்டிப்பாக இவர் இந்த சீரியலில் நடிக்கவில்லை என்றால் இந்த நாடகம் யாருமே விரும்பிப் பார்க்க முடியாத அளவிற்கு பின்னுக்குப் போய்விடும்.

ஏனென்றால் இந்த கதைக்கு உயிர் கொடுப்பதே கோபியுடன் நடிப்புதான். இவருக்கு பதிலாக இனி எந்த நடிகர் வந்தாலும் இந்த அளவிற்கு ஒரு யதார்த்தமான நடிப்பை கொடுப்பார்களா என்பது சந்தேகம் தான். ஒரு வேளை உண்மையிலேயே இந்த நாடகத்தில் ரெண்டு பொண்டாட்டியை சமாளிக்க முடியாமல் போகிறாரா என்று தெரியவில்லை. ஆனாலும் ராதிகா இந்த அளவுக்கு அவரை டார்ச்சர் செய்திருக்க கூடாது.

Also read: ராதிகாவை கல்யாணம் பண்ணது தப்பு என்று புலம்பும் கோபி.. மாமியாரின் டார்ச்சர்

Trending News