கதை, திரைக்கதை, வசனம் என்று அனைத்திலும் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடம் பிடித்தவர் பாக்கியராஜ். இவர் இயக்கத்தில் ரசிகர்களிடம் மாபெரும் வெற்றி பெற்ற படங்களின் வரிசையில் தற்போது பார்க்கலாம்.
இன்று போய் நாளை வா
1980இல் பாக்யராஜ் இயக்கத்தில் மாபெரும் வெற்றி பெற்ற படம் இன்று போய் நாளை வா. இந்த படத்தில் பாக்யராஜ் உடன் ராதிகா, பழனி சுவாமி, ரமணி போன்ற பிரபலங்கள் நடித்து இருப்பார்கள். இளையராஜா இசையில் இன்றளவும் திரும்பி பார்க்க வைத்த திரைப்படம். இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை கண்ணா லட்டு திங்க ஆசையா என்ற பெயரில் வெளியிட்டனர். இதில் சந்தானம் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். வேலையில்லாமல் எதிர்த்த வீட்டு பெண்ணை மூன்று பேர் காதலுக்காக போட்டி போடுவது போன்ற கதையம்சம் கொண்டது.
விடியும் வரை காத்திரு
கதை, திரைக்கதை, இயக்கம் என்று அனைத்திலும் கொடிகட்டி பறந்த பாக்யராஜின் அடுத்த படைப்பு விடியும் வரை காத்திரு. பாக்யராஜ் ஜோடியாக சத்யகலா நடித்திருப்பார், இசைஞானி இளையராஜாவின் மெல்லிசை பெரும் பக்கபலமாக அமைந்தது. க்ரைம், த்ரில்லர் கலந்த இந்த படம் ரசிகர்களிடையே மாபெரும் வெற்றி பெற்றது.
தூரல் நின்னு போச்சு
1982இல் பாக்கியராஜ், எம்.என்.நம்பியார், சுலக்சனா போன்ற பிரபலங்கள் நடிப்பில் வெளிவந்தது தூரல் நின்னு போச்சு. இளையராஜாவின் இசை மறக்க முடியாத அனுபவத்தை கொடுத்ததாக பாக்கியராஜ் ஒரு பேட்டியில் தெரிவித்திருப்பார். இந்த படத்தின் வெற்றியை வைத்து தெலுங்கு மற்றும் கன்னடத்தில் ரீமேக் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அந்த 7 நாட்கள்
தனது முழு திறமையான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார், இந்த படத்தில் பாக்யராஜ் ஜோடியாக அம்பிகா நடித்திருப்பார். பாலக்காடு மாதவனாக பாக்கியராஜ் நடித்த கதாபாத்திரம் இன்றளவும் ரசிகர்களிடையே பேசப்பட்டு வருகிறது. இந்தப் படம் தெலுங்கில் ‘ராதா கல்யாணம்’ என்று ரீமேக் செய்யப்பட்டது. ஹிந்தி மற்றும் கன்னடத்திலும் இந்த படம் ரீமேக் செய்யப்பட்டு வெளிவந்தது.
தாவணிக்கனவுகள்
1984-ல் பாக்யராஜ் இயக்கி, தயாரித்து வெளியிட்ட படம் தாவணிக்கனவுகள். இந்த படத்தில் பாக்யராஜுடன் இணைந்து சிவாஜி கணேசன் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். பாக்யராஜ் உடன் ராதிகா நடித்திருப்பார், ஐந்து தங்கைகளுடன் கஷ்டப்பட்டு வேலை கிடைத்து, காதலில் வெற்றி பெற்று, ஒரு இளைஞன் எப்படி வெற்றி பெறுகிறான் என்பதை மிக தத்ரூபமாக எடுத்திருப்பார். இந்தப் படத்தில் சிவாஜிகணேசன் பாக்கியராஜின் வீட்டு ஓனராக நடித்திருப்பார்.
முந்தானை முடிச்சு
1983இல் ரொமான்டிக் நிறைந்த காமெடி படமாக வெளிவந்தது முந்தானை முடிச்சு. இந்த படத்தில் பாக்யராஜுக்கு ஜோடியாக ஊர்வசி நடித்திருப்பார், பரிமளா என்ற கதாபாத்திரம் துருதுருவென்று கிராமத்து பெண்ணாக ஊர்வசி பல விருதுகளை தட்டிச் சென்றார். இந்த படம் கிட்டத்தட்ட 30 இலட்சம் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு பாக்ஸ் ஆபீஸ் ஹிட்டானது. அதுமட்டுமில்லாமல் 25 வாரங்களுக்கு மேல் ஓடி சில்வர் ஜூப்ளி படமாக அறிவிக்கப்பட்டது.
பாக்ஸ் ஆபீஸ் ஹிட் கொடுத்த இந்த படம் கிட்டத்தட்ட மூன்று கோடிக்கு மேல் வருமானம் ஈட்டி உள்ளதாம்.
டார்லிங் டார்லிங் டார்லிங்
இந்த படத்தில் கணவன் மனைவியாக நிஜ வாழ்க்கையில் ஜோடியாக இருக்கும் பூர்ணிமா பாக்கியராஜ் நடித்துருப்பார். தனது மனைவியை வைத்து ஹிட் கொடுத்த படம் என்ற பெயரும் பாக்யராஜுக்கு உண்டு. 1982ல் வெளிவந்த இந்த படம் கன்னடத்திலும் ரீமேக் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சின்ன வீடு
1985 ஆம் ஆண்டு கமர்ஷியல் ஹிட் கொடுத்த படம், பாக்யராஜுக்கு ஜோடியாக கல்பனா நடித்திருப்பார். முந்தானை முடிச்சு படத்தில் ஜோடியாக நடித்த ஊர்வசி இந்த படத்தில் தங்கையாக நடித்து இருப்பார். தமிழ் கலாசாரத்தை ஒரு பெண் எப்படி காப்பாற்றுகிறார் என்பதை தத்ரூபமாக எடுத்திருப்பார், ரசிகர்களிடையே மாபெரும் வெற்றி பெற்றது.
எங்க சின்ன ராசா
1987-ல் கன்னட நாவலை மையப்படுத்தி எடுக்கப்பட்டது, இதில் பாக்யராஜுக்கு ஜோடியாக ராதா நடித்திருப்பார். இந்த படம் வெற்றி பெற்றதையடுத்து தெலுங்கு மற்றும் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டது.
ராசுக்குட்டி
கதை, திரைக்கதை, இயக்கம் என்று மீண்டும் கையிலெடுத்து ராசுக்குட்டி என்ற வெற்றிப் படத்தைக் கொடுத்தார் பாக்கியராஜ். பாக்கியராஜ் ஜோடியாக ஐஸ்வர்யா நடித்திருப்பார். முக்கியமான கதாபாத்திரத்தில் மனோரமா, கல்யாண்குமார் போன்ற பிரபலங்கள் நடித்து இருப்பார்கள். இந்த படம் பாக்ஸ் ஆபீஸ் ஹிட்டானது குறிப்பிடத்தக்கது. ஜமிந்தார் போல் ஊர் சுற்றும் பாக்கியராஜி திருத்துவது போன்று கதை அமைக்கப்பட்டிருக்கும், பாக்யராஜ் காமெடி கதைகளில் ராசுக்குட்டி ஒரு முக்கியமான இடத்தைப் பிடித்தது.
இப்படி தமிழ் சினிமாவில் பல திறமைகளைக் கொண்டு தனக்கென்று ஒரு சாம்ராஜ்யத்தை உருவாக்கியவர் பாக்கியராஜ். முக்கியமாக பாக்கியராஜ் முருங்கக்காய் ஃபேமஸ் என்றுதான் நமக்குத் தெரியும், ஆனால் அதில் கூட அறிவியல் சம்பந்தமான காமெடி கலந்த சுவாரசியம் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.