வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

ரெண்டு பொண்டாட்டி ஓகே, இரண்டு புருஷனை வைத்து ஓட்டும் பாக்கியலட்சுமி.. கேடுகெட்ட சீரியலா இருக்கே!

Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில் என்னதான் இல்லத்தரசிகளின் மனதைக் கவரும் வகையில் பாக்யாவை சிங்கப் பெண் போல் காட்டினாலும் இந்த ரெண்டு பொண்டாட்டி கதையை விடவே மாட்டுக்காரு இயக்குனர். அதாவது ஆரம்பத்தில் ராதிகா என்ற கதாபாத்திரம் இல்லாமல் கோபி ஏதோ வேண்டா வெறுப்பாக பாக்கியாவிடம் பழகி வந்தார்.

அதன் பின் இடையில் ராதிகா என்ற கேரக்டரை கொண்டு வந்து கோபியின் இரண்டாவது மனைவியாக கதையை உருட்டி வந்தார். சரி இவர் என்னதான் கோபியை வைத்து இந்த மாதிரி வேலைகளை செய்தாலும், இவருடைய நடிப்பும் பாக்கியாவின் தன்னம்பிக்கையும் பார்த்து ரசித்து வந்தார்கள்.

Also read: பாக்கியலட்சுமி சங்கத்தமே வேண்டாம், ஓட்டம் பிடித்த மருமகள்.. ராதிகாவிற்கு டஃப் கொடுக்க சொன்னதால் ஏற்பட்ட விபரீதம்

அடுத்ததாக தற்போது அப்பனுக்கு தப்பாமல் பிள்ளை பிறந்திருக்கிறது என்பதற்கு ஏற்ப, கோபியை போலவே செழியனும் ரெண்டு பொண்டாட்டி விஷயத்தில் இறங்கி விட்டார். அதாவது கோபிகாவது பாக்யா பிடிக்கவில்லை, செட் ஆகலை என்று வேறொரு பெண்ணை தேடி போனார். ஆனால் இந்த செழியன் லவ் பண்ணி ஆசைப்பட்டு கல்யாணம் பண்ணி வந்த ஜெனியை விட்டுட்டு வேற ரூட்டுக்கு போய்விட்டார்.

இது என்னடா ஜெனிக்கு வந்த கொடுமை என்று பார்த்தால், தற்போது வந்த பிரமோவில் எழில் தலையை குண்டத் தூக்கிப் போடும் அளவிற்கு சோதனையாக இருக்கிறது. அதாவது அமிர்தா ஏற்கனவே திருமணம் செய்து அவருடைய கணவர் இறந்து போன நிலையில் பல வருடங்களாக குழந்தையுடன் தனி மரமாக வாழ்ந்து வந்தார்.

Also read: பாக்கியலட்சுமி கதையை கொண்டு வரும் எதிர்நீச்சல் சீரியல்.. நந்தினிக்கு காத்திருக்கும் புது ட்விஸ்ட்

அந்த நிலைமையில் இவர் மீது காதல் வயப்பட்டு எழில் வீட்டின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையை சந்தோஷமாக கழித்து வருகிறார். இந்த நிலையில் யாரும் எதிர்பார்க்காத விஷயமாக அமிர்தாவின் இறந்து போன முன்னாள் கணவரை மறுபடியும் நாடகத்திற்கு கொண்டு வருகிறார்கள். இது எப்படி சாத்தியமாகும். ஏற்கனவே ரெண்டு பொண்டாட்டி கதையை வைத்து உருட்டிட்டு வராரு இந்த டைரக்டர்.

இதையே பார்க்க முடியாமல் சகித்துக் கொண்டு வருகையில் இப்பொழுது இரண்டு புருஷனை வைத்து ஓட்ட போறாங்க. நாடகமாக இருந்தாலும் கொஞ்சமாவது லாஜிக் வேண்டும், பார்ப்பதற்கு நியாயமாகவும் இருக்க வேண்டும். இது என்ன கேடுகெட்ட சீரியல் என்று தலையில் அடித்துக் கொண்டு புலம்பி வருகிறார்கள் இந்த நாடகத்தை பார்ப்பவர்கள். இன்னும் இதையெல்லாம் வைத்து எந்த மாதிரியான ஆட்டத்தை காண்பிக்கப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Also read: காசிக்கு போனா இப்படி எல்லாம் மாறிடுவாங்களா! அடுத்தடுத்து அதிர்ச்சியை கொடுக்கும் பாக்கியலட்சுமி

Trending News