தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்கள் பட்டியலில் தவிர்க்க முடியாத இடத்தை பிடித்திருப்பவர் தான் இயக்குனர் பாலா. சேது, பிதாமகன், தாரை தப்பட்டை, பரதேசி என பல வெற்றி படங்களை வழங்கியவர். இவரது படங்கள் வியாபார ரீதியாக வெற்றி பெறவில்லை என்றாலும், நிச்சயம் ஏதேனும் ஒரு விருதை பெற்று விடும். அந்த அளவிற்கு நடிகர்களை வேலை வாங்குவார். அதேபோல் சூர்யா, விக்ரம் போன்ற நடிகர்களுக்கு இவரது படமே மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.
கடந்த 2011ம் ஆண்டு பாலா இயக்கத்தில் வெளியாகி வெற்றி பெற்ற படம்தான் அவன் இவன். படத்தில் ஆர்யா மற்றும் விஷால் இணைந்து நடித்திருந்தனர். ஆனால், முதலில் இப்படத்தில் நடிக்க இருந்தது வேறு சில நடிகர்கள் என தற்போது செய்திகள் வெளியாகியுள்ளது.
அவன் இவன் படத்தின் கதையை எழுதி முடித்த பாலா, முதலில் கார்த்தி – சூர்யா அல்லது ஜீவா – ஜித்தன் ரமேஷ் ஆகியோரை தான் நடிக்க வைக்க முயற்சி செய்துள்ளார். ஆனால் இவர்களால் இப்படத்தில் நடிக்க முடியாமல் போகவே இறுதியாக இந்த வாய்ப்பு விஷால், ஆர்யாவை தேடி சென்றுள்ளது.

ஒருவேளை பாலா நினைத்தது போல் சூர்யா – கார்த்தி அல்லது ஜீவா – ஜித்தன் ரமேஷ் இந்த படத்தில் நடித்திருந்தால் எப்படி இருந்திருக்கும். உங்களுக்கு ஏதாவது ஐடியா இருக்கா?